| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | ஹரிணி & எஸ்.பி. பாலசுப்ரமணியம் | தேவா | உன்னுடன் |
Kandupidi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…
பெண் : கண்கள் மயங்க வைத்து…
இளம் கன்னம் வருடியவன்…
விண்மீன் விழித்திருக்க…
அவன் நிலவைத் திருடியவன்…
—BGM—
ஆண் : கண்டுபிடி அவளைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டாள் கண்டுபிடி…
ஆண் : மணக்கும் கூந்தலினால்…
என் மார்பை வருடியவள்…
தடையம் ஏதும் இன்றி…
என் இதயம் திருடியவள்…
பெண் : கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…
—BGM—
பெண் : முகம் கொஞ்சம் நினைவிருக்கு…
அவன் முகவரி தெரியவில்லை…
முதல் முதல் திருடியதால்…
என்னை முழுசாய் திருடவில்லை…
—BGM—
ஆண் : யோசனை செய்வதர்க்கும்…
அந்த பூ முகம் நினைவில்லை…
வாசலில் மறைந்து விட்டாள்…
அவள் வாசனை மறையவில்லை…
பெண் : திருடி சென்றதை திருப்பி தந்தால்…
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்…
ஆண் : திருடி சென்றவள் திரும்பி வந்தால்…
மிச்சம் இருப்பதை மீண்டும் திருட சொல்வேன்…
பெண் : உறவே உறவே வருக…
ஆண் : உயிரால் உயிரை தொடுக…
—BGM—
ஆண் : நீ என்னை தழுவிகொண்டால்…
என் நெற்றிக்குள் இனிக்குமடி…
பெண்ணே உன் ஸ்பரிசத்திலே…
தங்கம் தண்ணீரில் விளையுமடி…
—BGM—
பெண் : மாறாப்பை சரியவிட்டு…
உந்தன் மார்போடு படரும் கோடி…
பேரின்ப கவி எழுத…
கம்பன் பிறக்கட்டும் பழைய படி…
ஆண் : நேரம் தூரம் மறந்து விட்டு…
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்…
பெண் : நீல இரவை நீள செய்து…
பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்…
ஆண் : உறவே உறவே வருக…
உயிரால் உயிரை தொடுக…
ஆண் : கண்டுபிடி அவளை கண்டுபிடி…
நெஞ்சை களவாடி ஓடி விட்டாள் கண்டுபிடி…
பெண் : கண்டுபிடி அவனை கண்டுபிடி…
நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…
ஆண் : மணக்கும் கூந்தலினால்…
என் மார்பை வருடியவள்…
பெண் : விண்மீன் விழித்திருக்க…
அவன் நிலவைத் திருடியவன்…
—BGM—
Notes : Kandupidi Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. கண்டுபிடி பாடல் வரிகள்.
