பூ விரிஞ்சாச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்தேவாமுகவரி

Poo Virinjachu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

ஆண் : நீ எனக்குள்ளே…
நான் உனக்குள்ளே…
பிரிவதேது பெண்ணே…
உயிரை பரிமாறு…

ஆண் : இலையில் பசுமை போல் நீ இணைந்தாய்…
என் நெஞ்சில் தன்னாலே…
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே…

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

—BGM—

ஆண் : பூ பூத்திருக்கும் முல்லை கொடிகாள்…
பூ பூத்து வைத்து காத்து இருங்கள்…
திருமண மாலைக்கு தேதி சொல்லி…
பறித்துக்கொள்வோம்…

பெண் : தேன் சுமந்திருக்கும் தென்னை மரங்காள்…
தேன் சேர்த்து வைத்து காத்து இருங்கள்…
திருமண இரவுக்கு தேவைப்படும் எடுத்துக்கொள்வோம்…

ஆண் : மேகங்காள் சிந்தாமல் நின்றாடுங்கள்…
பெண் : நீராட பன்னீரை தான் தூவுங்கள்…

ஆண் : முத்தம் சிந்தவா…
கண்ணோடு கண்ணோடு…

பெண் : முத்து குளித்தாய்…
நெஞ்சோடு நெஞ்சோடு…

ஆண் : மொத்தத்தில் உன்னை கொடு…

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

—BGM—

பெண் : நான் மௌனங்களில் கவிப் படித்தேன்…
நீ செய்கைகளில் மொழி பெயர்த்தாய்…
நாணத்தின் சாயத்தை…
முத்தமிட்டு முத்தமிட்டு நீ கரைத்தாய்…

ஆண் : என் கனவுகளின் உருவங்களை…
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்…
வலைகளின் ஒலிகளில்…
வாலிப தூக்கத்தை கலைத்துவிட்டாய்…

பெண் : உன் மார்பு சுட்டாலும் குற்றாலமே…
ஆண் : உன் பேரை சொன்னாலும் சங்கீதமே…

பெண் : முத்தம் கொடுப்பேன்…
சொல்லாதே சொல்லாதே…

ஆண் : சொல்லி சொல்லியே…
கொல்லாதே கொல்லாதே…

பெண் : உன் கைகள் இடம் மாறுதே…

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

ஆண் : நீ எனக்குள்ளே…
நான் உனக்குள்ளே…
பிரிவதேது பெண்ணே…
உயிரை பரிமாறு…

ஆண் : இலையில் பசுமை போல் நீ இணைந்தாய்…
என் நெஞ்சில் தன்னாலே…
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே…

—BGM—


Notes : Poo Virinjachu Song Lyrics in Tamil. This Song from Mugavaree (2000). Song Lyrics penned by Vairamuthu. பூ விரிஞ்சாச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading