கண்டுபிடி கண்டுபிடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
இளையகம்பன்ஹரிஹரன் & ஹரிணிசபேஷ் & முரளிசமுத்திரம்

Kandupidi Kandupidi Song Lyrics in Tamil

BGM

பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…

BGM

பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…

ஆண் : சேலை நூலையே கொண்டு…
இந்த சீன சுவரை இழுத்தாயே…
திருடனைத் திருடிக் கொண்டு…
நீ காதல் ஊடல் செய்தாயே…

பெண் : தினசரி தவனை முறையினில் வந்து…
செலவு செய் என்னை…

ஆண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…

BGM

ஆண் : கண்ணில் தூண்டில்கள் மாட்டி…
சின்ன இடுப்பில் மதுக் கடையை காட்டி…
சுக கண் காட்சி நீ காட்டுறியே…
சுடும் சூரியனை அடி ஆக்குறியே…

BGM

பெண் : புத்தகம் இடையில் வாசி…
இந்த புயலை பூட்ட வழி யோசி…
நீ உடும்பாகி என்னை உருசேர்த்து…
தினம் உலை யேற்று…

ஆண் : மேகம் மழை சிந்தும் போது…
ஜலதோஷம் பூமிக்கு ஏது…
மன்மத நாட்டு புதயல்கள்…
உந்தன் புடவைக்குள் உள்ளது…

பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
ஆண் : கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…

BGM

பெண் : பண்டம் மாற்று முறை போல…
ஏன் முத்த மாற்று முறை செய்தாய்…
இந்த வீணைக்குள் புயல் வீசும்…
அது உன் விரலை விலைப்பேசும்…

BGM

ஆண் : கண்ணில் உன் அழகு ஊறும்…
என் இதயம் தலைகீழாய் மாறும்…
அடி உன்னை தொட்டால் அனல் வேர்க்கும்…
குளிர் ஜுரம் தாக்கும்…

பெண் : கட்டில் மேல் தேர்தல் வைத்து…
அட இணைந்து இருவரும் வெல்வோம்…
காமனின் நாட்டு தேசிய கீதம்…
கண்களால் எழுதுவோம்…

ஆண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…

பெண் : என் சேலை நூலையே கொண்டு…
இந்த சீன சுவரை இழுத்தேனே…
திருடனைத் திருடிக் கொண்டு…
நான் காதல் ஊடல் செய்வேனே…

ஆண் : தினசரி தவனை முறையினில் வந்து…
செலவு செய் என்னை…

பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
ஆண் : கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…

BGM

Notes : Kandupidi Kandupidi Song Lyrics in Tamil. This Song from Samudhiram (2001). Song Lyrics penned by Ilaiyakamban. கண்டுபிடி கண்டுபிடி பாடல் வரிகள்.

Scroll to Top