தங்கப்பதக்கத்தின் மேலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்எங்கள் தங்கம்

Thangapadkathin Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே…
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…

பெண் : ஆஅ… ஆஆ… ஆஆஅ…

ஆண் : தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே…
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…

—BGM—

ஆண் : முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து…
மெல்லத் தவழ்வது கண்டு…
முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து…
மெல்லத் தவழ்வது கண்டு…

ஆண் : ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்…
மின்னி மறைவதும் உண்டு…
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்…
மின்னி மறைவதும் உண்டு…

ஆண் : அழகு நடையைப் பழகும் சிலையை…
அணைக்க வந்தேனே…
இதழ்கள் பொழியும் அமுத மழையில்…
மிதக்க வந்தேனே…

ஆண் : தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே…
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…

—BGM—

ஆண் : பட்டாடை தொட்டாடத் தென்றல் துணிந்து…
பக்கம் நடந்தது என்ன…
பட்டாடை தொட்டாடத் தென்றல் துணிந்து…
பக்கம் நடந்தது என்ன…

ஆண் : உயிர்க்காதல் தலைவன் காவல் இருக்க…
தொட்டு இழுப்பது என்ன…
உயிர்க்காதல் தலைவன் காவல் இருக்க…
தொட்டு இழுப்பது என்ன…

ஆண் : பனியில் நனையும் மலரின் உடலில்…
குளிர் எடுக்காதோ…
ஒருவன் மடியில் மயங்கும்போழுது…
சுகம் பிறக்காதோ…

பெண் : தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
இந்த பட்டுக் கன்னங்களின் மேலே…

ஆண் : ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…

—BGM—

பெண் : கொத்தோடு முத்தாட வஞ்சிக் கொடியை…
தொட்டு தொடர்வது என்ன…

—BGM—

பெண் : கொத்தோடு முத்தாட வஞ்சிக் கொடியை…
தொட்டு தொடர்வது என்ன…
அந்தி மாலைப் பொழுதில் காதல் நினைவை…
கொட்டி அளப்பது என்ன…
அந்தி மாலைப் பொழுதில் காதல் நினைவை…
கொட்டி அளப்பது என்ன…

பெண் : ஊரும் உறவும் அறியும் வரையில்…
கண்கள் மட்டோடு…
ஊரும் உறவும் அறியும் வரையில்…
கண்கள் மட்டோடு…

பெண் : மணமாலை தோளில் சூடும் நாளில்…
கைகள் தொட்டாடு…
மணமாலை தோளில் சூடும் நாளில்…
கைகள் தொட்டாடு…

பெண் : தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
இந்த பட்டுக் கன்னங்களின் மேலே…

ஆண் : ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…

பெண் : ஆஆ… ஆஆ… ம்ம்…ம்ம்ம்… ம்ம்…


Notes : Thangapadkathin Song Lyrics in Tamil. This Song from Engal Thangam (1970). Song Lyrics penned by Vaali. தங்கப்பதக்கத்தின் மேலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading