கனவே கலையாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ்.சித்ராதேவாகண்ணெதிரே தோன்றினாள்

Kanave Kalaiyadhe Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவே கலையாதே…
காதல் கனவே கலையாதே…

ஆண் : கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடும் ஓர் வாசகம்…

ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா…
மௌனத்தினாலே கொல்வாயா…
சின்ன திருவாய் மலர்வாயா…

ஆண் : கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடும் ஓர் வாசகம்…

ஆண் : கனவே கலையாதே…
காதல் கனவே கலையாதே…

BGM

குழு : தாம் தக்கிட்டதோம்…
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்…
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்…

குழு : தாம் தக்கிட்டதோம்…
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்…
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்…

ஆண் : நீ மௌனம் காக்கும்போதும்…
உன் சார்பில் எந்தன் பேரை…
உன் தோட்டப் பூக்கள் சொல்லும் இல்லையா…

பெண் : ஒரு தென்றல் தட்டும்போதும்…
கடும் புயலே முட்டும்போதும்…
அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையே…

ஆண் : உன் இதழை கேட்டால்…
அது பொய்கள் சொல்லும்…
உன் இதயம் கேட்டால்…
அது மெய்கள் சொல்லும்…

பெண் : ம்… இதயத்தை கேட்க நேரமில்லை…
இது வரை இதயத்தில் யாருமில்லை…
சந்து கிடைத்தால் நுழைவாயா…

ஆண் : கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடும் ஓர் வாசகம்…

BGM

குழு : தாம் தக்கிட்டதோம்…
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்…
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்…

குழு : தாம் தக்கிட்டதோம்…
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்…
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்…

BGM

ஆண் : உண்மை காதல் உண்டு…
அதை உள்ளே வைத்துக்கொண்டு…
ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே…

பெண் : மெல்லிய மழையின் துளிகள்…
ஒரு மேகத்துக்குள் உண்டு…
அதுதானே பொழியும் பிழியப் பார்க்காதே…

ஆண் : நீ மழை தரும் முகிலா…
இல்லை இடி தரும் முகிலா…
என் வேர் நனைப்பாயா…
இல்லை விலகிடுவாயா…

பெண் : ஆவணி மாதம் கழியட்டுமே…
கார்த்திகை வந்தால் மழை வருமே…
இன்னும் சில நாள் பொறு மனமே…

ஆண் : கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடு ஓர் வாசகம்…

ஆண் : கனவே கலையாதே…
காதல் கனவே கலையாதே…

ஆண் : கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடும் ஓர் வாசகம்…

ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா…
மௌனத்தினாலே கொல்வாயா…
சின்ன திருவாய் மலர்வாயா…

ஆண் : கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடு ஓர் வாசகம்…

BGM


Notes : Kanave Kalaiyadhe Song Lyrics in Tamil. This Song from Kannedhirey Thondrinal (1998). Song Lyrics penned by Vairamuthu. கனவே கலையாதே வரிகள்.


Scroll to Top