சின்ன சின்ன கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஹரன்தேவாகண்ணெதிரே தோன்றினாள்

Chinna Chinna Kiliye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…

ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா…
தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா…
களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா…
கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா…

ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு…
உன் காலில் விழுவேன் நீ சொல்லு…
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…

—BGM—

ஆண் : நிலா நிலா காதல் நிலா…
அவள் வாழ்வது உள்ளூாிலா…
உலா உலா வா வெண்ணிலா…
கண் வாழ்வது கண்ணீாிலா…

ஆண் : பாதை கொண்ட மண்ணே…
அவளின் பாத சுவடு பாா்த்தாயா…
தோகை கொண்ட மயிலே…
அவளின் துப்பட்டாவை பாா்த்தாயா…

ஆண் : ஊஞ்சலாடும் முகிலே…
அவளின் உச்சந்தலையை பாா்த்தாயா…
ஓடுகின்ற நதியே…
அவளின் உள்ளங்காலை பாா்த்தாயா…

ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு…
உன் காலில் விழுவேன் நீ சொல்லு…
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…

—BGM—

ஆண் : எங்கே எங்கே விண்மீன் எங்கே…
பகல் வானிலே நான் தேடினேன்…
அங்கே இங்கே காணோம் என்று…
அடி வானிலே நான் ஏறினேன்…

ஆண் : கூடு தேடும் கிளியே…
அவளின் வீடு எங்கே பாா்த்தாயா…
உள்ளாடும் காற்றே…
அவளின் உள்ளம் சென்று பாா்த்தாயா…

ஆண் : தூரல் போடும் துளியே…
உயிரை தொட்டுப் போனவள் பாா்த்தாயா…
பஞ்சு போன்ற நெஞ்சை…
தீயில் விட்டுப் போனவள் பாா்த்தாயா…

ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு…
உன் காலில் விழுவேன் நீ சொல்லு…
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…

ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா…
தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா…
களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா…
கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா…

ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு…
உன் காலில் விழுவேன் நீ சொல்லு…
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…

—BGM—


Notes : Chinna Chinna Kiliye Song Lyrics in Tamil. This Song from Kannedhirey Thondrinal (1998). Song Lyrics penned by Vairamuthu. சின்ன சின்ன கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading