கண் இரண்டில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத் நரேஷ் ஐய்யர்விஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

Kan Irandil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…

ஆண் : என் உயிரின் உயிரே…
என் இரவின் நிலவே…
உன் அருகில் வரவே…
நீ தருவாய் வரமே… ஓ… ஓ… ஓ…

ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு…
யாரையும் நினைக்கலையே…
உந்தன் முகம் பார்த்த பின்னே…
எதுவும் பிடிக்கலையே…

ஆண் : உன்னுடைய பார்வையிலே…
என் உடம்பு வேகுதடி…
பக்கத்திலே நீ இருந்தா…
என் வயசு நோகுதடி…

ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…

BGM

ஆண் : ஓ… ஏதோ ஒண்ணு சொல்ல…
என் நெஞ்சுகுழி தள்ள…
நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம்…
கண்ணுமுன்னே தள்ளாட…

ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம்…
என் கண்ணுக்குள்ளே ஆட…
நீ சொல்லும் சொல்லே கேக்காமலே…
உந்தன் உள்ளம் திண்டாட…

ஆண் : உள்ளுக்குள்ளே படபடக்க…
நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க…
கால் இரண்டும் ரெக்க கட்டி…
மேலே கீழே பரபரக்க…
பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே…

BGM

ஆண் : ம்ம்ம்… ம்ம்ம்… ஹ்ம்ம்… ம்ம்ம்…
ம்ம்ம்… ம்ம்ம்… ஹ்ம்ம்… ம்ம்ம்…

ஆண் : உன் முத்து முத்து பேச்சு…
என் சங்கீதமா ஆச்சு…
உன் சுண்டு விரல் தீண்டையில…
நின்னு போச்சு என் மூச்சு…

ஆண் : பஞ்சு மெத்த மேகம்…
அது செஞ்சு வச்ச தேகம்…
நீ தூரத்தில நின்னா கூட…
பொங்கிடுது என் முகம்…

ஆண் : முட்ட கண்ணு முழி அழகில்…
குத்தி குத்தி கொன்னவளே…
சிக்கி கிட்ட என் மனச…
ஊற வச்சு துவச்சவளே…
ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே…

ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு…
யாரையும் நினைக்கலையே…
உந்தன் முகம் பார்த்த பின்னே…
எதுவும் பிடிக்கலையே…

ஆண் : உன்னுடைய பார்வையிலே…
என் உடம்பு வேகுதடி…
பக்கத்திலே நீ இருந்தா…
என் வயசு நோகுதடி…

ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே…
காரணம் இன்றியே நான் சிரித்தேனே…
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை…
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே…

ஆண் : என் உயிரின் உயிரே…
என் இரவின் நிலவே…
உன் அருகில் வரவே…
நீ தருவாய் வரமே…


Notes : Kan Irandil Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by
Eknath. கண் இரண்டில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading