கல்யாண மேள சத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். ஜானகிஇளையராஜாதம்பிக்கு எந்த ஊரு

Kalyaana Mela Song Lyrics in Tamil

BGM

பெண் : கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது…
என்னமோ தோணுது…
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது…
சிட்டாக பறக்குது…

பெண் : கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது…
என்னமோ தோணுது…
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது…
சிட்டாக பறக்குது…

குழு : அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…
அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : புது காத்து வீசுதடி…
பூ ஆட தோணுதடி…
அன்னம் போல் ஓடையில…
அருவி தண்ணி ஓடுதடி…

பெண் : வெள்ளி தெண்ட மீன போல…
துள்ளுதடி என் மனசு…
வெள்ளி தெண்ட மீன போல…
துள்ளுதடி என் மனசு…

பெண் : சில்லுவண்டு கண்ணு ரெண்டும்…
சுத்துது சொழலுது…
அள்ளி தண்டு மேனி எங்கும்…
சந்தனம் மணக்குது…
சுட்டு வைக்கும் வெட்கம் வந்து தள்ளாட… ஹோய்…

குழு : அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…
அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…

BGM

பெண் : மலையேறி மேஞ்சு வரும்…
மணி கழுத்து வெள்ள பசு…
மாலையில வீடு வரும்…
ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்…

பெண் : மணி ஓசை கேக்கும் போது…
மயங்குது என் மனசு…
மணி ஓசை கேக்கும் போது…
மயங்குது என் மனசு…

பெண் : துள்ளி வரும் கன்று குட்டி…
முட்டுது மெறழுது…
முட்டி முட்டி பால் குடிக்க…
தாய் பசு அழைக்குது…
அந்த சுகம் என்ன சுகம் அம்மாடி… ஹோய்…

பெண் : கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது…
என்னமோ தோணுது…
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது…
சிட்டாக பறக்குது…

குழு : அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…
அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…

BGM

Notes : Kalyaana Mela Song Lyrics in Tamil. This Song from Thambikku Entha Ooru (1984). Song Lyrics penned by Panchu Arunachalam. கல்யாண மேள சத்தம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading