ஆலயமென்றால் ஆலயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்தேவி தரிசனம்

Alayam Endraal Alayam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…

—BGM—

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…

ஆண் : காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்…
கனவாய் மாற்றும் ஆலயம்…
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்…
கனவாய் மாற்றும் ஆலயம்…

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…

—BGM—

ஆண் : சாலை வழியே தனியே சென்றால்…
தானும் வருவாள் பவானியே…

—BGM—

ஆண் : தாயே சரணம் என்று விழுந்தால்…
தன் கை கொடுப்பாள் பவானியே…
தாயே சரணம் என்று விழுந்தால்…
தன் கை கொடுப்பாள் பவானியே…

—BGM—

ஆண் : காலையில் மஞ்சள் நீரில் மூழ்கி…
காரிகைமார்கள் கூடுகின்றார்…

—BGM—

ஆண் : கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே…
காளியின் பெருமை பாடுகின்றார்…
கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே…
காளியின் பெருமை பாடுகின்றார்…

ஆண் : காளி திரிசூலி…
குழு : காளி திரிசூலி…
ஆண் : நீலி ஜெகன்மாதா…
குழு : நீலி ஜெகன்மாதா…

ஆண் : தேவி பராசக்தி…
குழு : தேவி பராசக்தி…
ஆண் : ஓம் சக்தி பவானி…
குழு : பவானி பவானி…

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…

—BGM—

ஆண் : தாலியைக் காட்டி வேலியை நினைந்து…
தம்மை மறந்தே ஆடிகின்றார்…

—BGM—

ஆண் : தர்மம் என்பதை காணாதவர்கள்…
சன்னிதி முழுவதும் தேடுகின்றார்…

—BGM—

ஆண் : பாளையத்தம்மா இருப்பதை மறந்து…
பாவிகள் எல்லாம் ஆடுகின்றார்…

—BGM—

ஆண் : பட்டப் பகலில் கண்களை இழந்து…
பாதையை மாற்றி ஓடுகின்றார்…

—BGM—

ஆண் : தவறு நடந்தால் பாளையத்தம்மா
சக்தியை அங்கே காட்டுகின்றாள்

—BGM—

ஆண் : தர்மம் வெல்லும் என்பதைச் சொல்லி…
தாயின் பெருமையை நாட்டுகின்றாள்…

—BGM—


Notes : Alayam Endraal Alayam Song Lyrics in Tamil. This Song from Devi Dharisanam (1981). Song Lyrics penned by Kannadasan. ஆலயமென்றால் ஆலயம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading