தேவியின் காலடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ்.விஸ்வநாதன்தேவி தரிசனம்

Deviyin Kaaladi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தேவியின் காலடி திருப்பாதம் விளையாட…
திசைகளில் இரு நான்கு உலகமும் வடிவாக…
தேவியின் கண் கொஞ்சம் திறந்தாட அசைந்தாட…
திகழ்ந்திடும் கதிரவனின் ஒளியங்கு உருவாக…

—BGM—

ஆண் : தேவியின் மறுகண்ணில் தெளிவான ஒளி தோன்ற…
தேய்பிறை வளர் பிறையில் வெண்மதி நிலையாக…

—BGM—

ஆண் : கார்குழல் நளினங்கள் கலகல என்றாட…
கார்முகில் கூட்டங்கள் வானெங்கும் நிறைந்தோட…

—BGM—

ஆண் : கணம் தோறும் அவள் மூச்சு மார்பினைத் தாலாட்ட…
காற்றினில் உயிர் மூச்சு பிறந்தது சுகமாக…
சக்தியின் குண்டலங்கள் தகதிமி என்றாட…
தங்கு கடல் நதிகள் மலைகள் எழுந்தாட…

—BGM—

ஆண் : ஒரு கை அசைய உயிரினம் வளர…
மறுகை அசைய மனிதர்கள் பிறக்க…
குழு : ஓம் ஓம் ஓம்…

ஆண் : ஆவி வளர்ப்பது தேவி தரிசனம்…
பாவம் தவிர்ப்பது தேவி தரிசனம்…
காவல் கொடுப்பது தேவி தரிசனம்…
காலத்தை வெல்வது தேவி தரிசனம்…
தேவி சரணம்… தேவி தரிசனம்… தேவி சரணம்…

—BGM—


Notes : Deviyin Kaaladi Song Lyrics in Tamil. This Song from Devi Dharisanam (1981). Song Lyrics penned by Kannadasan. தேவியின் காலடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading