காக்கிச் சட்டை போட்ட மச்சான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன் & எஸ். பி. சைலஜாசந்திரபோஸ்சங்கர் குரு

Kakki Chattai Potta Machan Song Lyrics in Tamil


BGM

பெண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்…
களவு செய்யக் கன்னம் வைச்சான்…
கன்னம் வைக்க வந்த மச்சான்…
கன்னத்தில கன்னம் வைச்சான்…

பெண் : பக்கம் வந்து பக்கம் வந்து…
பாவி மனச பத்தவச்சான்…
எங்க வீட்டுத் திண்ணையில…
இதுக்குத் தானா குத்த வச்சான்…

ஆண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்…
களவு செய்யக் கன்னம் வைச்சான்…
கன்னம் வைக்க வந்த மச்சான்…
கன்னத்தில கன்னம் வைச்சான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பக்கம் வந்து பக்கம் வந்து…
பாவி மனச பத்தவச்சான்…
உங்க வீட்டுத் திண்ணையிலே…
அதுக்குத் தானா குத்த வச்சான்…

பெண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்…
களவு செய்யக் கன்னம் வைச்சான்…

BGM

பெண் : அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே…
சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்லை…

ஆண் : ஆத்துக்கு வடக்கே ஐயப்பன் தோப்பு…
அதுக்குள்ள வாடி யாருமில்லே…
ஏ ஹேய்… ஏ ஹெய்…

பெண் : ஹெய்… தோப்புக்குள்ளே சத்தமிருக்கு…
ஆமா நெஞ்சில் அச்சமிருக்கு…

ஆண் : மானே என்ன அச்சம் உனக்கு…
மாமன்கிட்டே மச்சமிருக்கு…

பெண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்…
களவு செய்யக் கன்னம் வைச்சான்…

ஆண் : கன்னம் வைக்க வந்த மச்சான்…
கன்னத்தில கன்னம் வைச்சான்…

BGM

ஆண் : வெளக்க அணைச்சா வெவரம் என்ன…
ஒத்திகை பார்த்தா தப்பு இல்லை…

பெண் : ஒத்திகை இங்கே உண்மையாப் போனா…
கல்யாணம் நடக்கும் நமக்குள்ள…
ஏ ஹேய்… ஏ ஹெ…

ஆண் : ஹெய்… இன்னும் என்னை நம்பவில்லையா…
கன்னம் தர எண்ணமில்லையா…

பெண் : தாலி இன்னும் செய்யவில்லையா…
சேதி சொல்ல தேதி சொல்லையா…

ஆண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்…
களவு செய்யக் கன்னம் வைச்சான்…

பெண் : கன்னம் வைக்க வந்த மச்சான்…
கன்னத்தில கன்னம் வைச்சான்…

ஆண் : பக்கம் வந்து பக்கம் வந்து…
பாவி மனச பத்தவச்சான்…

பெண் : எங்க வீட்டுத் திண்ணையிலே…
இதுக்குத் தானா குத்த வச்சான்…

ஆண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்…
களவு செய்யக் கன்னம் வைச்சான்…

பெண் : கன்னம் வைக்க வந்த மச்சான்…
கன்னத்தில கன்னம் வைச்சான்…


Notes : Kakki Chattai Potta Machan Song Lyrics in Tamil. This Song from Shankar Guru (1987). Song Lyrics penned by Vairamuthu. காக்கிச் சட்டை போட்ட மச்சான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading