சின்ன சின்ன பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிசந்திரபோஸ்சங்கர் குரு

Chinna Chinna Poovey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சின்ன சின்ன பூவே…
நீ கண்ணால் பாரு போதும்…

—BGM—

ஆண் : சின்ன சின்ன பூவே…
நீ கண்ணால் பாரு போதும்…
தொட்டு தொட்டு பேசு…
என் துன்பம் எல்லாம் தீரும்…

ஆண் : கண்ணே உன் கை பட்டால்…
காஞ்ச கொடி பிஞ்சு விடும்…
பட்ட மரம் பாலூறும்…
பாகற்காய் தேனூறும்… ஓஓ… ஓஹோ…

பெண் : சின்ன சின்ன பூவே…
நீ கண்ணால் பாரு போதும்…
தொட்டு தொட்டு பேசு…
என் துன்பம் எல்லாம் தீரும்…

—BGM—

ஆண் : உலகத்தில் பூவெல்லாம் உன் போல அழகில்ல…
நானும் உன் அம்மாவும் பண்ணாத தவமில்ல…

ஆண் : தென் பாண்டி மன்னவனோ…
முழுகித்தான் முத்தெடுத்தான்…
தேனே உன் அம்மாவோ முழுகாம முத்தெடுத்தா…

ஆண் : கண்ணே தெய்வம் கண்டேன்…
உந்தன் கண்ணில் சன்னிதி…
உன் முத்தம் பட்டு எச்சில் பட்டா…
கொஞ்சம் நிம்மதி…

ஆண் : சின்ன சின்ன பூவே…
நீ கண்ணால் பாரு போதும்…

பெண் : தொட்டு தொட்டு பேசு…
என் துன்பம் எல்லாம் தீரும்…

—BGM—

ஆண் : பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாரது…
உன் பேச்ச கேக்காம ஒரு நாளும் விடியாது…
நீ உண்ண பால் கிண்ணம் போதாது பொன் மானே…
நிலவென்னும் கிண்ணத்தை நான் கொண்டு வருவேனே…

ஆண் : பூவும் பூவும் உன்ன பார்த்து…
பேசிக் கொண்டது…
இந்த காட்டில் ஓடும் ஒடை கூட…
உன் பேர் சொன்னது…

பெண் : சின்ன சின்ன பூவே…
நீ கண்ணால் பாரு போதும்…
தொட்டு தொட்டு பேசு…
என் துன்பம் எல்லாம் தீரும்…

ஆண் : கண்ணே உன் கை பட்டால்…
காஞ்ச கொடி பிஞ்சு விடும்…
பட்ட மரம் பாலூறும்…
பாகற்காய் தேனூறும்… ஓஓ… ஓஹோ…

ஆண் : சின்ன சின்ன பூவே…
நீ கண்ணால் பாரு போதும்…
தொட்டு தொட்டு பேசு…
என் துன்பம் எல்லாம் தீரும்…
தன்னன்னானதானா… தன்னன்னானதானா…


Notes : Chinna Chinna Poovey Song Lyrics in Tamil. This Song from Shankar Guru (1987). Song Lyrics penned by Vairamuthu. சின்ன சின்ன பூவே பாடல் வரிகள்.


Scroll to Top