கதைப்போமா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கோ. சேஷாசித் ஶ்ரீராம்லியோன் ஜேம்ஸ்ஓ மை கடவுளே

Kadhaippoma Song Lyrics in Tamil


குழு (பெண்கள்) : தினனா தினா நம்தினனா…
தினனா தினா நம்தினனா…
தனதோம் தனதோம் தனதோம்…
தரிதினா தாராரா…

குழு (பெண்கள்) : தினனா தினா நம்தினனா…
தினனா தினா நம்தினனா…
தனதோம் தனதோம்…
தனதோம் தரிதினா தாராரா…

குழு (பெண்கள்) : தனதோம் தனதோம்…
தனதோம் தரிதினா தாராரா…

—BGM—

ஆண் : நேற்று நான் உன்னை…
பார்த்த பார்வை வேறு…
நீங்காத எண்ணமாக…
ஆனாய் இன்று…
உன்னோடு நானும் போன…
தூரம் யாவும் நெஞ்சிலே…
ரீங்கார நினைவுகளாக…
அலையய் இங்கே மிஞ்சுதே…

ஆண் : நூலறுந்த பட்டம் போலே…
உன்னை சுற்றி நானும் ஆட…
கைகள் நீட்டி நீயும் பிடிக்க…
காத்திருக்கிறேன்…
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன…
கேட்க வேண்டும் உன்னை…
காலம் கை கூடினால்…

ஆண் : கதைப்போமா… கதைப்போமா…
கதைப்போமா… ஆ
ஒன்றாக நீயும் நானும் தான்…
கதைப்போமா கதைப்போமா…
கதைப்போமா… ஆ… ஆ…
நீ பேச பேச…
காயம் ஆறுமே…

—BGM—

ஆண் : அதிகாலை வந்தால்…
அழகாய் என் வானில் நீ…
அணையாத சூரியன் ஆகிறாய்…
நெடு நேரம் காய்ந்து…
கத கதப்பு தந்தவுடன்…
நிலவாய் உருமாறி நிற்கிறாய்…

ஆண் : உன்னை இன்று பார்த்ததும்…
என்னை நானே கேட்கிறேன்…
வைரம் ஒன்றை…
கையில் வைத்து…
எங்கே தேடி அலைந்தாயோ…

ஆண் : உண்மை என்று தெரிந்துமே…
நெஞ்சம் சொல்ல தயங்குதே…
கைகள் கோர்த்து பேசினாலே…
தைரியங்கள் தோன்றுமே…

ஆண் : கதைப்போமா… கதைப்போமா…
கதைப்போமா…
ஒன்றாக நீயும் நானும் தான்…
கதைப்போமா… கதைப்போமா…
கதைப்போமா… ஆ…
நீ பேச பேச…
காயம் ஆறுமே…

—BGM—

ஆண் : கதைப்போமா…
கதைப்போமா…
கதைப்போமா…

—BGM—

குழு (பெண்கள்) : தினனா தினா நம்தினனா…
தினனா தினா நம்தினனா…
தனதோம் தனதோம் தனதோம்…
தரிதினா தாராரா…

குழு (பெண்கள்) : தினனா தினா நம்தினனா…
தினனா தினா நம்தினனா…
தனதோம் தனதோம் தனதோம்…
தரிதினா தாராரா…

குழு (பெண்கள்) : தனதோம் தனதோம் தனதோம்…
தரிதினா தாராரா…

ஆண் : கதைப்போமா… கதைப்போமா…
கதைப்போமா…
ஒன்றாக நீயும் நானும் தான்…
கதைப்போமா… கதைப்போமா…
கதைப்போமா…
நீ பேச பேச…
காயம் ஆறுமே…..


Notes : Kadhaippoma Song Lyrics in Tamil. This Song from Oh My Kadavule (2020). Song Lyrics penned by Ko Sesha. கதைப்போமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading