கடவுளும் நீயும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & எஸ்.ஜானகிசௌந்தர்யன்சிந்துநதி பூ

Kadavullum Neeyam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…

ஆண் : நதியென்றால் நுரை உண்டு…
வாழ்வென்றால் குறை உண்டு…

பெண் : ஐப்பசி வந்தால் அடைமழை காலம்…
சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம் தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…

BGM

ஆண் : அன்றொரு நாள் சின்னப்பிள்ளையிலே…
உன் தாய் எரிந்தாள் சொந்தக் கொள்ளியிலே…
வெந்துவிட்டாய் சின்னப் பிஞ்சினிலே…
பட்ட வடு இன்னும் நெஞ்சினிலே…

ஆண் : தாய்மை இல்லாமல் யாரும் இங்கில்லை…
கர்ப்பம் இல்லாமல் கடவுள் இங்கில்லை…
தாய்ப்பாலை போல தீர்த்தம் வேறில்லை…
அவள் வாய் சொல்லை போல வேதம் வேறில்லை…

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…

ஆண் : நதியென்றால் நுரை உண்டு…
வாழ்வென்றால் குறை உண்டு…

BGM

ஆண் : தீயிருந்தால் அங்கே புகையிருக்கும்…
உறவிருந்தால் கொஞ்சம் பகையிருக்கும்…
கடலிருந்தால் எங்கோ கரையிருக்கும்…
கதையிருந்தால் ஏதோ முடிவிருக்கும்…

ஆண் : வாழ்வும் வாராமல் சாவும் நேராமல்…
ரெண்டும் இல்லாமல் மண்ணில் வாழ்கின்றாய்…
பெண்மை கண்டாலே தாய்மை காண்கின்றாய்…
பலர் பூஜை கொண்டாடும் பூவாய் வாழ்கின்றாய்…

பெண் : அன்புள்ள மகனே அழுதது போதும்…
புன்னகை சிந்து இனி பூக்களின் மாதம்…

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…

ஆண் : நதியென்றால் நுரை உண்டு…
வாழ்வென்றால் குறை உண்டு…


Notes : Kadavullum Neeyam Song Lyrics in Tamil. This Song from Sindhu Nathi Poo (1994). Song Lyrics penned by Vairamuthu. கடவுளும் நீயும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading