காற்றாக வருவாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநவீன் குமார்தேவாஉன்னைத்தேடி

Kaatraga Varuvaya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காற்றாக வருவாயா…
கடலாக வருவாயா…
பூவாக வருவாயா…
புயலாக வருவாயா…

ஆண் : நிலவாக வருவாயா…
நிஜமாக வருவாயா…
நீ சொல் சொல்லாமல் சொல்…
நீ சொல் சொல்லாமல் சொல்…

—BGM—

ஆண் : பிப்ரவரி பதினான்கில் பூவோடு காத்திருப்பேன்…
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா…
வேலைகளின் நாடு நடுவே டெலிபோனில் இம்சிக்க…
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா…

ஆண் : பனிவீசும் காலையிலே தேநீராய் வருவாயா…
வெயில் வீசும் மாலையிலே ஐஸ்கிரீம்மாய் வருவாயா…

ஆண் : காய்ச்சல் கொண்டு நான் தவிக்கையிலே…
ஒரு நர்ஸை போல நீ வருவாயா…
சேர்த்து வைக்கும் என் சம்பளத்தை…
அடி செலவு செய்ய நீ வருவாயா…

ஆண் : நீ சொல் சொல்லாமல் சொல்…
நீ சொல் சொல்லாமல் சொல்…

—BGM—

ஆண் : நான் போடும் டிசர்ட்டை லிப்ஸ்டிக்கால் கறையாக்க…
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா…
தெரியாமல் நான் செய்யும் தவறுகளை சரி செய்ய…
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா…

ஆண் : பேச்சுலர் வாழ்க்கைக்கு பை சொல்ல வருவாயா…
பேமலி மேன் ஆக என்னை மாற்ற வருவாயா…

ஆண் : உரசி கொண்டு என் பைக்கினிலே…
என் காதை கடித்துக்கொண்டு வருவாயா…
உதட்டில் இருக்கும் என் சிகரெட்டை…
நீ பிடுங்கி எரிந்திட வருவாயா…

ஆண் : நீ சொல் சொல்லாமல் சொல்…
நீ சொல் சொல்லாமல் சொல்…

ஆண் : காற்றாக வருவாயா…
கடலாக வருவாயா…
பூவாக வருவாயா…
புயலாக வருவாயா…

ஆண் : நிலவாக வருவாயா…
நிஜமாக வருவாயா…
நீ சொல் சொல்லாமல் சொல்…
நீ சொல் சொல்லாமல் சொல்…


Notes : Kaatraga Varuvaya Song Lyrics in Tamil. This Song from Unnai Thedi (1999). Song Lyrics penned by Vaali. காற்றாக வருவாயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading