கார கருண இடுப்பழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகல்பனா & எம். எல். ஆர். கார்த்திகேயன்என்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Kaara Karuuna Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…

ஆண் : நாறா என நீ கிழிக்காத…
என நாளும் பொழுதும் விலகாத…

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே…
தேனு முட்டாய் இனிப்பழகே…
ராங்கா என நீ நினைக்காத…
என ராவும் பகலும் ஒதுக்காத…

ஆண் : வந்தா தருவேன் வாடி சிட்டு…
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு…

பெண் : இந்தா நீ என ஏந்திக்கிட்டு…
நல்ல தேதி பாத்து தாலி கட்டு…

ஆண் : கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
நாறா என நீ கிழிக்காத…
என நாளும் பொழுதும் விலகாத…

—BGM—

ஆண் : காங்கேயம் காளை உன்னால மூள…
மாடாகி போறேனே மொத்ததில…

பெண் : மாராப்பு சேலை மச்சான் உன்னால…
சூடாகி போகுது வெக்கத்துல…

ஆண் : பொழுது சாயும் வரையில்…
நீ புதையல் போல தெரிவ…

பெண் : ஏ… பொழுது சாஞ்ச பிறகு…
நீ அதையும் தேடி வருவ…

ஆண் : பல தினுசா சினுங்கிடுவ…
என முழுசா திருடி தின்னுடுவ…

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே…
தேனு முட்டாய் இனிப்பழகே…
ராங்கா என நீ நினைக்காத…
என ராவும் பகலும் ஒதுக்காத…

—BGM—

ஆண் : மாந்தோப்பு குள்ள வாயேன்டி மெள்ள…
நோகாம நான் தாரேன் பத்து புள்ள…

பெண் : ஆகாத சொல்ல நீ வீசி செல்ல…
ஏதேதோ ஆனேனே பச்சப்புள்ள…

ஆண் : எதையும் தாங்கும் இதயம்…
உன் அழக பார்த்தா சரியும்…

பெண் : என் உறுதியான முடிவும்…
நீ உரசி போனா முறியும்…

ஆண் : எரியும் விளக்கு அணையும்…
புது வெளிச்சம் இனிமேதான் தெரியும்…

ஆண் : கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
நாறா என நீ கிழிக்காத…
என நாளும் பொழுதும் விலகாத…

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே…
தேனு முட்டாய் இனிப்பழகே…
ராங்கா என நீ நினைக்காத…
என ராவும் பகலும் ஒதுக்காத…

ஆண் : வந்தா தருவேன் வாடி சிட்டு…
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு…

பெண் : இந்த நீ என ஏந்திக்கிட்டு…
நல்ல தேதி பாத்து தாலி கட்டு…


Notes : Kaara Karuuna Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. கார கருண இடுப்பழகே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading