காதல் பெரியதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுதா ரகுநாதன்யுவன் ஷங்கர் ராஜாசத்தம் போடாதே

Kaadhal Periyadha Song Lyrics in Tamil


ஆண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

BGM

பெண் : காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…
காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…

பெண் : தேக சாலையில் நடந்து போகையில்…
காமம் பெரியது… ஹேஹே…
தேகம் என்பதை கடந்து போகையில்…
காதல் பெரியது… ஹேஹே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அட காமம் இல்லா காதல்…
அது கதவே இல்லா வீடு…
அட காதல் இல்லா காமம்…
அது வீடே இல்லை காடு…

பெண் : யே காமம் என்பது உடலில் வந்ததும்…
மிருகம் எட்டி பார்க்கும்…
யே காதல் என்பது உயிரில் கலந்ததும்…
உன்னை புனிதம் ஆக்கும்…

பெண் : உடல் காமம் இறந்து போகும்…

BGM

பெண் : உயிர் காதல் என்றும் வாழும்…

BGM

பெண் : காட்டில் நாமும் வாழ்ந்த போதிலே…
கூச்சம் நம்மை தீண்டவில்லையே…
மீண்டும் சென்று காட்டில் வாழ்ந்து பார்ப்போம்…

பெண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : கனவு கண்டு வாழ்ந்தால்…
அந்த வாழ்க்கை வாழ்க்கை இல்லை…

ஆண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

BGM

பெண் : காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…
காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…

BGM

குழு : கடையை திறக்கும் போது…
நீ காசை அள்ளி வீசு…
ஆசை இருக்கும் போதே…
நீ அள்ளி கொண்டு ஓடு…

குழு : நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…

பெண் : அண்டம் முழுதும் ஆசைதானடா…
பிண்டம் முழுதும் போதைதானடா…
உன்னை என்னை வெற்றி கொள்ள வாடா…

பெண் : கண்டம் உனக்கு பெண்ணில் தானடா…
கண்டம் எனக்கு ஆணில்தானடா…
தப்பி போக தப்பு செய்ய வாடா…

பெண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : கனவு கண்ட போது…
நம் கண்கள் திறக்கவில்லை…
கண்ணை திறந்த போது…
அந்த கனவு அங்கு இல்லை…

ஆண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

குழு : கடையை திறக்கும் போது…
நீ காசை அள்ளி வீசு…
ஆசை இருக்கும் போதே…
நீ அள்ளி கொண்டு ஓடு…

குழு : நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…

பெண் : காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…
காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…

பெண் : தேக சாலையில் நடந்து போகையில்…
காமம் பெரியது… ஹேஹே…
தேகம் என்பதை கடந்து போகையில்…
காதல் பெரியது… ஹேஹே…

பெண் : அட காமம் இல்லா காதல்…
அது கதவே இல்லா வீடு…
அட காதல் இல்லா காமம்…
அது வீடே இல்லை காடு…

பெண் : யே காமம் என்பது உடலில் வந்ததும்…
மிருகம் எட்டி பார்க்கும்…
யே காதல் என்பது உயிரில் கலந்ததும்…
உன்னை புனிதம் ஆக்கும்…

பெண் : உடல் காமம் இறந்து போகும்…

BGM

பெண் : உயிர் காதல் என்றும் வாழும்…

BGM


Notes : Kaadhal Periyadha Song Lyrics in Tamil. This Song from Satham Podathey (2007). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் பெரியதா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading