காதல் என்னுள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வேல் முருகன்ரஞ்சித் கோவிந்த்ராஜேஷ் முருகேசன்நேரம்

Kaadhal Ennulle Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…

ஆண் : என் வீட்டை திடல் ஆக்கி விளையாடும் பறவைப் போல்…
மனதினுள்ளே வந்தாடுவது யாரோ…
என் சுவாச அறையாகி என்னை தாங்கும் உடலாகி…
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ…

ஆண் : காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…

—BGM—

ஆண் : அர்த்தமில்லா வீணான வார்த்தைகளை…
நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்…
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்…
நான் கேட்கும் முன்னே தருவாய்…

ஆண் : உன் முக தசைகளில்…
எங்கே வெட்கம் உள்ளதென்று…
நீ பேசும் நேரம் எல்லாம்…
நானும் தேடி பார்ப்பேன்…

ஆண் : குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால்…
உன்னுள்ளே நானும் வந்தால்…
மெதுவாய் சரியாய் அது போகாதா…

ஆண் : காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…

—BGM—

ஆண் : வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே…
உன்னோடு இல்லை என்றால் தவிப்பேன்…
வாழும் நாட்களிலும் ஆயுள் முழுதிலும்…
உன் வாசத்திலே பிழைப்பேன்…

ஆண் : என் பலம் பலவீனம் எல்லாம் தெரிஞ்சாலும்…
உன் அன்பு வந்த பின்பு என் நாணம் மாறிப்போகும்…
என் குணம் குணவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால்…
நலமாய் நலமாய் அது மாறாதா…

ஆண் : காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…

ஆண் : என் வீட்டை திடல் ஆக்கி விளையாடும் பறவைப் போல்…
மனதினுள்ளே வந்தாடுவது யாரோ…
என் சுவாச அறையாகி என்னை தாங்கும் உடலாகி…
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ…

—BGM—

Notes : Kaadhal Ennulle Song Lyrics in Tamil. This Song from Neram (2013). Song Lyrics penned by Vel Murugan. காதல் என்னுள்ளே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading