ஜிங்கு ஜிக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசோலார் சாய் & கல்பனாடி. இமான்மைனா

Jingu Chikka Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு…
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு…
எங்கே நீயும் கிளம்பிப்போற சொல்லு வேகமா…
நானும் துணைக்கி வாறேன்…
பேசிக்கிட்டே கண்ணே போவோமா…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

பெண் : ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு…
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு…
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க…
நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம் எட்டி நகருங்க…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : நாடு ரொம்ப கெட்டுப்போச்சி…
நல்லதெல்லாம் செத்துப்போச்சி…
கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா…
நீயும் கூடாதென்னு சொல்லாதடி குட்டி கோகிலா… ஹேய்…

—BGM—

ஆண் : ராயங்கூரு மூனு மயிலு…
நாங்குனேரி நூறு மயிலு…
சாயங்கால வேளையில சேலை எதுக்கடி…
சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் விலகடி…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

பெண் : சீராலூரு அஞ்சு மயிலு…
சிதம்பரமோ அம்பது மயிலு…
வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன…
அந்த வெட்கம் கெட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : செங்கிப்பட்டி ஒம்பது மயிலு…
சிங்கப்பூரு எத்தன மயிலு…
அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி…
உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி…

—BGM—

ஆண் : பூதலூரு ஏழு மயிலு…
பூண்டிக்கோயிலு நாலு மயிலு…
காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா…
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா…

—BGM—

பெண் : கும்பகோணம் ஆறு மயிலு…
குளித்தலையோ நாலு மயிலு…
ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல…
உங்க அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : மாயவரம் எட்டு மயிலு…
மன்னார்குடி பத்து மயிலு…
இறைக்காத கேணியில நீரு ஏதடி…
என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி…
அடியே ஹேய்…

—BGM—

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

—BGM—

Notes : Jingu Chikka Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Yugabharathi. ஜிங்கு ஜிக்கா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading