அய்யங்காரு வீட்டு அழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்அந்நியன்

Iyengaaru Veetu Azhage Song Lyrics in Tamil


BGM

ஆண் : அய்யங்காரு வீட்டு அழகே…
அய்யங்காரு வீட்டு அழகே…
அய்யங்காரு வீட்டு அழகே…

ஆண் : உன் போல் அழகி பிறக்கவும் இல்லை…
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை…

பெண் : உன் போல் சமத்து உலகினில் இல்லை…
காதலன் சமத்து காதலில் தொல்லை…

ஆண் : அறியாமைதான் இங்கே பேரின்பம் அன்பே…
காதலின் வகுப்பில் மாணவன்தான் பண்டிதனே…

ஆண் : அய்யங்காரு வீட்டு அழகே…
அய்யங்காரு வீட்டு அழகே…
அய்யங்காரு வீட்டு அழகே…

BGM

ஆண் : மகரந்த பொடிகளை எடுத்து…
அதில் மஞ்சள் தங்கம் கொஞ்சம் இட்டு இடித்து…
இரு கன்னம் எங்கும் சுண்ணம் பூசி வண்ணம் செய்தானோ…
ஒரு கோடி பூக்கள் கொண்டு ஜோடி பூக்கள் செய்தானோ…

பெண் : உன் உதடு சேர்ந்தால்…
குழு : ஜம் தன ஜம் தன…
பெண் : பூப்படையும் வார்த்தை…
குழு : ஜம் தன ஜம் தன…

பெண் : நம் உதடு சேர்ந்தால்…
குழு : ஜம் தன ஜம் தன…
பெண் : பூப்படையும் வாழ்கை…

ஆண் : அள்ளி சேர்த்தே உந்தன் உயிருக்குள்…
அனுமதி ஒரு முறை…

ஆண் : அய்யங்காரு வீட்டு அழகே…
அய்யங்காரு வீட்டு அழகே…
அய்யங்காரு வீட்டு அழகே…

BGM

பெண் : ஆஆ… உச்சி வானை தத்தி தாவி இழுத்து…
பொன் நட்சத்திர தோரணங்கள் சமைத்து…
நீ முத்து தாமா பந்தா் கீழே மாலை கொள்வாயா…
உன் முத்ததாலே வானும் மண்ணும் ஈரம் செய்வாயா…

ஆண் : வான்மழையில் நனைந்தால்…
குழு : ஜம் தன ஜம் தன…
ஆண் : பயிர்கள் உருவாகும்…
குழு : ஜம் தன ஜம் தன…

ஆண் : ஆண் மழையில் நனைந்தால்…
குழு : ஜம் தன ஜம் தன…
ஆண் : உயிர்கள் உருவாகும்…

பெண் : ஆ… தயங்காதே மெல்ல…
தொடங்கட்டும் அழகிய தவறுகள்…

ஆண் : அய்யங்காரு வீட்டு அழகே…
பெண் : அய்யங்காரு வீட்டு அழகா…
ஆண் : அய்யங்காரு வீட்டு அழகே…

ஆண் : உன் போல் அழகி பிறக்கவும் இல்லை…
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை…

பெண் : உன் போல் சமத்து உலகினில் இல்லை…
காதலன் சமத்து காதலில் தொல்லை…

ஆண் : அறியாமைதான் இங்கே பேரின்பம் அன்பே…
காதலின் வகுப்பில் மாணவன்தான் பண்டிதனே…

பெண் : அய்யங்காரு வீட்டு அழகா…
ஆண் : அய்யங்காரு வீட்டு அழகே…
பெண் : அய்யங்காரு வீட்டு அழகா… அழகா…


Notes : Iyengaaru Veetu Azhage Song Lyrics in Tamil. This Song from Anniyan (2005). Song Lyrics penned by Vairamuthu. அய்யங்காரு வீட்டு அழகே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top