என் நிழலினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இ.ரமணிகாந்தன்ஹரிணிபைஜு ஜேக்கப்லைசென்ஸ்

En Nizhalini Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நிழலினி நீ…
நிஜமும் நீ…
என் துணையி நீ…
தோழி நீ…

பெண் : யாதும் ஆகி நின்றாய்…
என் அருகில்…
தூரம் கடந்து வந்தாய்…
தூய உணர்வில்…

பெண் : காலம் கடந்து போனாலும்…
நம் நட்பு நீங்காதே…
ஆதி அந்தம் அன்பின் வடிவம் இவள்தானே…

பெண் : என் நிழலினி நீ…
நிஜமும் நீ…
என் துணையி நீ…
தோழி நீ…

BGM

பெண் : தொப்புள் கொடி உறவும் இல்ல…
தோழி இவ தாயும் இல்ல…
அதைதாண்டி எனக்காக வந்த சொந்தமே…

பெண் : நட்புக்கு இலக்கணம் நீயடி…
வலிகள் ஆற்றிடும் தாய் மடி…
இவள் எழுச்சியின் வடிவம்…
பகையை எரித்திடும் உருவம்…
இவள் அன்பை அழந்தால்…
அமுத சுரபியும் தோற்கும்…

பெண் : என் நிழலினி நீ…
நிஜமும் நீ…
என் துணையி நீ…
தோழி நீ…

BGM

பெண் : இசை என கலந்தவள் நீ…
இறைவியாய் மலர்ந்தவள் நீ…
பேரின்பம் தாலாட்டும் உறவே…

பெண் : சிறகு இன்றி நாம் பறக்கலாம்…
புதிய உலகிலே மிதக்கலாம்…

பெண் : இனி தடைகளை உடைப்போம்…
புதிய சரித்திரம் படைப்போம்…
நாம் தோழமை விதைப்போம்…
விழியில் புன்னகை சுமப்போம்…

பெண் : என் நண்பி நீ…
நலமும் நீ…
என் அன்பி நீ…
அனைத்தும் நீ…

பெண் : யாதும் ஆகி நின்றாய்…
என் அருகில்…
தூரம் கடந்து வந்தாய்…
தூய உணர்வில்…

பெண் : காலம் கடந்து போனாலும்…
நம் நட்பு நீங்காதே…
ஆதி அந்தம் அன்பின் வடிவம் இவள்தானே…

பெண் : என் நிழலினி நீ…
நிஜமும் நீ…
என் துணையி நீ…
தோழி நீ…


Notes : En Nizhalini Song Lyrics in Tamil. This Song from License (2023). Song Lyrics penned by E. Ramani Gandhan. என் நிழலினி பாடல் வரிகள்.


Scroll to Top