இளஞ்சோலை பூத்ததா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉனக்காகவே வாழ்கிறேன்

Ilanjolai Poothatha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…
இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…

ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட…
சில மேகங்கள் நீரூற்ற…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…

—BGM—

ஆண் : எந்த சொந்தங்கள் யாரோடு என்று…
காலம்தான் சொல்லுமா… ஆஆ…
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்…
தேதிதான் சொல்லுமா…

ஆண் : சோலை எங்கும் சுகந்தம்…
மீண்டும் இங்கே வசந்தம்…

—BGM—

ஆண் : நெஞ்சம் ஏன்தான் மயங்கும்…
கண்கள் சொன்னால் விளங்கும்…
ஒரு மௌனம் தீர்ந்தது…
சுதியோடு சேர்ந்தது…

ஆண் : ஒரு தாளம் ராகம் சொல்ல…
சந்தம் பொங்கும் மெல்ல…
மாயமல்ல மந்திரம் அல்ல…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
இளஞ்சோலை பூத்ததா…

—BGM—

ஆண் : ஊமையாய் போன சங்கீதம் ஒன்று…
இன்றுதான் பேசுதோ… ஓ…
மேடை இல்லாமல் ஆடாத கால்கள்…
இன்றுதான் ஆடுதோ…

ஆண் : கண்ணில் என்ன கனவோ… ஓ…
நெஞ்சில் என்ன நினைவோ…

ஆண் : நம்மை யார்தான் கேட்ப்பது…
விதிதானே சேர்ப்பாது…

ஆண் : இந்த பாசம் பாவம் இல்லை…
நேசம் மோசம் இல்லை…
கங்கை என்றும் காய்வதுமில்லை…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…

ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட…
சில மேகங்கள் நீரூற்ற…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…


Notes : Ilanjolai Poothatha Song Lyrics in Tamil. This Song from Unakkaagave Vaazhgiren (1986). Song Lyrics penned by Vairamuthu. இளஞ்சோலை பூத்ததா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading