இதயம் போகுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்ஜென்சிஇளையராஜாபுதிய வார்ப்புகள்

Idhayam Poguthe Song Lyrics in Tamil


பெண் : இதயம் போகுதே…
இதயம் போகுதே எனையே பிரிந்தே…
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு…
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ…

பெண் : இதயம் போகுதே…

BGM

பெண் : மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று…
கைகள் தட்டிய காளை சென்றதெங்கே…
அரும்பான என் காதல் மலராகுமோ…
மலராகி வாழ்வில் மனம் வீசுமோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்தே…

BGM

பெண் : சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல்…
தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா…
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ…
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ…

பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்தே…

BGM

பெண் : மலைச்சாரல் ஓரம் மயிலாடும் நேரம்…
பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா…
நிழல் போல உன்னோடு நான் சங்கமம்…
தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்…

பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்தே…
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு…
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ…

பெண் : இதயம் போகுதே…


Notes : Idhayam Poguthe Song Lyrics in Tamil. This Song from Puthiya Vaarpugal (1979). Song Lyrics penned by Muthulingam. இதயம் போகுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading