பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தேன்மொழி | கபில் & ஜனனி எஸ் வி | சைமன் கே. கிங் | கொலைகாரன் |
Idhamaai Unplugged Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இதமாய் இதமாய் உயிர் தொடுவாயா…
இதமாய் இதழால் உடல் நனைப்பாயா…
இதமாய் உருகும் இரவில்…
என்னை தொலைப்பாயா… ஹோ… ஓ…
ஆண் : இதமாய் இதமாய் இடை வலைப்பாயா…
இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா…
இதமாய் உதிரம் அதிர…
என்னை வதைப்பாயா… ஓ… ஓ… ஹோ… ஓ…
பெண் : வலை ஓசை எல்லாம் மெல்ல வாய் மூடுதே…
என் நாணம் எல்லாம் கத்தி கொண்டாடுதே…
எறும்பாக நாணம் என் உடலில்…
ஊர்ந்து போகுதே…
ஆண் : இதமாய் இதமாய் இடை வலைப்பாயா…
இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா…
இதமாய் உதிரம் அதிரா…
என்னை வதைப்பாயா… ஆ… ஆ… ஆ…
—BGM—
ஆண் : வியர்வைகள் பாம்பென…
முதுகினில் இறங்குதே…
செயற் குறி வலிக்க தீண்டாயோ… ஓ… ஓ… ஹோ… ஓ…
போர்வைகள் விலகியே போர்க்களம் பிறக்குதே…
நெருங்கிட இடையை தாராயோ… ஓ… ஓ…
பெண் : பெருநிலா இதழ்களால் உடலினில் நீந்து…
பிறவியின் பயன் அது கூடிடுமே…
சாமத்தை காமத்தில் கடந்திடும் முன்னே…
தூய மௌனம் உடைந்திடுமே…
ஆண் : இதமாய் இதமாய் இடை வலைப்பாயா…
இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா…
இதமாய் உதிரம் அதிர…
என்னை வதைப்பாயா… ஓ… ஓ… ஹோ… ஓ…
—BGM—
ஆண் : மறுமுறை அலையென நரம்புகள் புலம்புதே…
மார்பினில் மறித்து போவேன்…
ஓ… ஓ… ஓ… ஹோ… ஓ…
இரவினை பிறை என பல முறை இழுக்கிறேன்…
அணைப்பினில் நொருங்கிப்போவேனோ… ஓ… ஓ… ஓ…
பெண் : பதறிடும் உதடுகள் இடரிடும் எங்கோ…
ஆழ் மன ஆடையும் அவிழ்கிறதே…
சுடுகிற வரை விரல் சுகம் கொடுத்தாலும்…
மாய மிருகம் ஏங்கிடுதே…
ஆண் : இதமாய் இதமாய் இடை வலைப்பாயா…
இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா…
இதமாய் உதிரம் அதிர…
என்னை வதைப்பாயா… ஆ… ஆ… ஆ…
பெண் : வலை ஓசை எல்லாம் மெல்ல வாய் மூடுதே…
என் நாணம் எல்லாம் கத்தி கொண்டாடுதே…
எறும்பாக நாணம் என் உடலில்…
ஊர்ந்து போகுதே…
Notes : Idhamaai Unplugged Song Lyrics in Tamil. This Song from Kolaigaran (2019). Song Lyrics penned by Then Mozhi. இதமாய் அன்பிளெக்ட் பாடல் வரிகள்.