புன்னகையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிச்சரன் & ஷாஷா திருப்பதிஏ. ஆர். ரகுமான்24

Punnagaye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…

பெண் : இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…

பெண் : மழை சாதுவான இசையென சாதுவான இசையென…
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை…
என்னோடு இசைக்கிறதே…

ஆண் : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

குழு (ஆண்கள்) : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

ஆண் : அந்த வானமே…
பல துண்டானதே…

குழு (ஆண்கள்) : அது மண்ணில் விழுந்து…
நம்மைக் கொண்டாடுதே…
இனி கல்லும் முள்ளும் சொல்லும்…
மழையின் ரகசியமே…

பெண் : புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…

பெண் : இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…

பெண் : மழை சாதுவான இசையென சாதுவான இசையென…
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை…
என்னோடு இசைக்கிறதே…

—BGM—

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
கான மழையோ ஏழு ஸ்வரமே…
காதல் மழையோ நூறு ஸ்வரமே…
உன் சின்னத் திமிரோ நாதஸ்வரமே…
நீ என்னுள் கலந்தால் ஜீவ ஸ்வரமே…

பெண் : மறக்காமலே நான்…
நன்றி சொல்வேன்…
மழை துளியால் மாலை கட்டுவேன்…

ஆண் & பெண் : புன்னகையே…
பள பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…

ஆண் & பெண் : இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…

பெண் : மழை சாதுவான இசையென சாதுவான இசையென…
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை…
என்னோடு இசைக்கிறதே…

ஆண் : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

குழு (ஆண்கள்) : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

ஆண் : அந்த வானமே…
பல துண்டானதே…

குழு (ஆண்கள்) : அது மண்ணில் விழுந்து…
நம்மைக் கொண்டாடுதே…
இனி கல்லும் முள்ளும் சொல்லும்…
மழையின் ரகசியமே…


Notes : Punnagaye Song Lyrics in Tamil. This Song from 24 (2016). Song Lyrics penned by Vairamuthu. புன்னகையே பாடல் வரிகள்.


Scroll to Top