இதமாய் இதமாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தமயந்திகார்த்திக் & கீர்த்தனா வைத்தியநாதன்சைமன் கே. கிங்கொலைகாரன்

Idhamaai Idhamaai Song Lyrics in Tamil


பெண் : இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா…
இதமாய் இரவில் உயிர் வதைப்பாயா…
இதமாய் நெளியும் விரலில்…
கதை படிப்பாயா… ஹோ… ஓ… ஓ…

ஆண் : இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா…
இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா…
இதமாய் எந்தன் உடலில்…
உயிர் பதிப்பாயா… ஹோ… ஹோ… ஓ… ஓ…

பெண் : மறு வாய்ப்பே இல்லா ஒரு முத்ததில்லா…
திரை ஏதும் இல்லா சிறு வெட்கத்தில்லா…
களவாடும் போது உன் பெயரை…
காதில் சொல்லவா…

ஆண் : இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா…
இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா…
இதமாய் எந்தன் உடலில்…
உயிர் பதிப்பாயா… ஆ… ஆ… ஹா… ஆ…

—BGM—

ஆண் : உயிர்த்துளி நெருப்பென…
இடை வழி படருதே…
குடை என விரிந்து சேராயோ…
ஓ… ஓ… ஓ… ஓ…
ஒரு நொடி உறங்கிடா… ஆ…
இரவுகள் புதியதே… ஏ…
விடிந்திட தடைகள் சொல்லாயோ… ஓ…

பெண் : சில்லிடும் உடலினில்…
பிரதி எடுத்தாயோ…
என் மனம் உடைகள் துறக்கிறதே…
நீ ஒரு முறை என…
இறங்கிடும் முன்னே…
மாய மௌனம் கேட்க்கிறதே…

—BGM—

ஆண் : கனவினில் கடல் என…
இரு விழி தவிக்குதே…
வளையளுள் வலைகள் வீசாயோ…
ஓ… ஓ… ஓ… ஓ….
காதலை சொல்லிடும் வகுப்புகள் புதியதே…
இரவினில் உரைகள் சொல்லாயோ… ஓ…

பெண் : இரு உடல் ஒன்றினால்…
கணக்கொன்று சொல்லும்…
புரிந்தே நானும் மயங்குகிறேன்…
பிறை நிலா போல் உந்தன்…
காடுகள் மேலே சாரல்…
மழையாய் தூவுகிறேன்…

ஆண் : இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா…
இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா…
இதமாய் எந்தன் உடலில்…
உயிர் பதிப்பாயா… ஆ… ஆ… ஹா… ஆ…

பெண் : மறு வாய்ப்பே இல்லா ஒரு முத்ததில்லா…
திரை ஏதும் இல்லா சிறு வெட்கத்தில்லா…
களவாடும் போது உன் பெயரை…
காதில் சொல்லவா…


Notes : Idhamaai Idhamaai Song Lyrics in Tamil. This Song from Kolaigaran (2019). Song Lyrics penned by Dhamayanthi. இதமாய் இதமாய் பாடல் வரிகள்.


Scroll to Top