ஹே பாடல் ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாப்ரியா

Hey Padal Ondru Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…
சேரும் போது அந்த கீதம்…
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்…

பெண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…

BGM

ஆண் : மின்னல் உந்தன் பெண்மை…
என்னைத் தாக்கும் ஆயுதம்…
மின்னல் உந்தன் பெண்மை…
என்னைத் தாக்கும் ஆயுதம்…

ஆண் : மேகம் உந்தன் கூந்தல்…
மலர் ஆடும் ஊஞ்சலாம்…
ஹோய் ஹோய் மேகம் உந்தன் கூந்தல்…
மலர் ஆடும் ஊஞ்சலாம்…

ஆண் : என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே…
தேனில் ஆடும் திராட்சை நீயே…

பெண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…

BGM

பெண் : தீபம் கொண்ட கண்கள்…
என்னை நோக்கும் காதலில்…
தீபம் கொண்ட கண்கள்…
என்னை நோக்கும் காதலில்…

பெண் : தாகம் கொண்ட நெஞ்சம்…
என்னைப் பார்க்கும் ஜாடையில்…
ஹோய் ஹோய் தாகம் கொண்ட நெஞ்சம்…
என்னைப் பார்க்கும் ஜாடையில்…

பெண் : இளம் காதல் ராஜா கண்ணா உந்தன்…
நெஞ்சில் ஆடும் தேவி நானே…

ஆண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…

BGM

பெண் : நேரம் இன்ப நேரம்…
விழி போடும் ஓவியம்…
நேரம் இன்ப நேரம்…
விழி போடும் ஓவியம்…

ஆண் : ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம்…
ஹோய் ஹோய் ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம்…

பெண் : ஒரு மாலை நேரம் மன்னா உந்தன்…
மார்பில் ஆடும் மாலை நானே…

பெண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…
ஆண் : சேரும் போது அந்த கீதம்…
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்…

ஆண் : ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…


Notes : Hey Padal Ondru Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. ஹே பாடல் ஒன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading