காந்தி தேசமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநான் சிகப்பு மனிதன்

Gandhi Desame Song Lyrics in Tamil


ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…

—BGM—

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…

ஆண் : பதவியின் சிறைகளில்…
பாரதமாதா பரிதவிக்கிறாள்…
சுதந்திர தேவி சுயநலப் புலிகளின்…
துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்…

ஆண் : தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…
தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…

—BGM—

ஆண் : காந்தியும் நேருவும் வாங்கிய சுதந்திரம்…
ஒரு சிலர் உரிமையில்லை…
ஒரு சிலர் உரிமையில்லை…

ஆண் : வளமுண்டு குறைவில்லை…
ஏழைக்கு நிறைவில்லை…
வறுமைக்கு வறுமை இல்லை…
வறுமைக்கு வறுமை இல்லை…

ஆண் : சாலையில் தனிமையில் அழகிய இளமயில்…
நடக்கவும் முடியவில்லை…
நடக்கவும் முடியவில்லை…

ஆண் : இளமையும் கரைந்தது இருபுறம் நரைத்தது…
வேலையும் கிடைக்கவில்லை…
வேலையும் கிடைக்கவில்லை…

ஆண் : ஜாதி என்கின்ற மாயப் பேய் ஒன்று…
ரத்தம் கேட்கின்றதே…
தர்மம் தப்பித்து கள்வன் கோட்டைக்குள்…
தஞ்சம் கேட்கின்றதே…

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…

—BGM—

ஆண் : இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள்…
எல்லையில் நிறைந்திருப்பார்…
எல்லையில் நிறைந்திருப்பார்…

ஆண் : நாட்டினைக் காசுக்குக் காட்டியே கொடுப்பவர்…
ஊருக்குள் ஒளிந்திருப்பார்…
ஊருக்குள் ஒளிந்திருப்பார்…

ஆண் : அஹிம்சையைப் போதித்த தேசத்தில் ரத்தத்தின்…
ஆறுகள் ஓடுதடா… ஆறுகள் ஓடுதடா…

ஆண் : ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல்…
வான் வரை ஏறுதடா…
வான் வரை ஏறுதடா…

ஆண் : விடுதலை வாங்க அன்று நாம் தந்த…
விலைகள்தான் கொஞ்சமா…
வேலியே இன்று பயிரை மேய்கின்ற…
நிலைமைதான் மாறுமா…

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…

ஆண் : பதவியின் சிறைகளில்…
பாரதமாதா பரிதவிக்கிறாள்…
சுதந்திர தேவி சுயநலப் புலிகளின்…
துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்…

ஆண் : தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…
தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…


Notes : Gandhi Desame Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (1985). Song Lyrics penned by Vairamuthu. காந்தி தேசமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading