அவள் யார் அவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக்வித்யாசாகர்அன்பு

Aval Yaar Aval Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவள் யார் அவள் அழகானவள்…
அடி நெஞ்சிலே மின்னல்…
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்…
முதல் காதலின் துள்ளல்…

ஆண் : எத்தனை எத்தனை நளினம்…
அடி என்னுயிர் எங்கும் சலனம்…
இருமுறை இருமுறை ஜனனம்…
அது உன்னை காண்டிட தருனம்…
ரத்தம் மொத்தம் உறைகின்றதே…

ஆண் : அவள் யார் அவள் அழகானவள்…
அடி நெஞ்சிலே மின்னல்…
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்…
முதல் காதலின் துள்ளல்…

—BGM—

ஆண் : அன்பே நீ என் நெஞ்சை போர் கப்பல் போல் வந்து…
சொல்லாமல் கொள்ளாமல் தாக்காதே…
குழு : தாக்காதே…

ஆண் : ஆணோடு எப்போதும் இம்சைகள் செய்கின்ற…
ஆதிக்க பெண்ணாக மாறாதே…
குழு : மாறாதே…

ஆண் : அந்தி நிலா ஆ அந்தி நிலா…
அல்லி மலர் அள்ளி அள்ளி எய்தவளா…
என்னவளா என்னவளா…
என்னை ஒரு அர்த்தமென செய்தவளா…

ஆண் : செவ்வரி ஊறிய விழிகள்…
அதில் செந்தமிழ் மிஞ்சிடும் மொழிகள்…
புன்னகை செய்யும் புயல் மேகமே…

ஆண் : அவள் யார் அவள் அழகானவள்…
அடி நெஞ்சிலே மின்னல்…
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்…
முதல் காதலின் துள்ளல்…

—BGM—

ஆண் : ஐந்தாறு கண்டங்கள் நீதாண்டி சென்றாலும்…
அங்கேயும் உனை வந்து பெண் பார்ப்பேன்…
செவ்வாயில் நீ சென்று வாழ்ந்தாலும்…
நான் உந்தன் செவ்வாயில் ஓரத்தில் தேன் வார்ப்பேன்…

ஆண் : என்னுயிரே என்னுயிரே…
மெய்யாக நான் இங்கு பொய்யானேன்…
என்னுயிரே என்னுயிரே…
பொய்யல்ல நான் இங்கு நீயானேன்…

ஆண் : சட்டென சட்டென இதயம்…
பல சில்லென சில்லென உடையும்…
அத்தனை சில்லிலும் உன் பிம்பமே…

ஆண் : அவள் யார் அவள் அழகானவள்…
அடி நெஞ்சிலே மின்னல்…
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்…
முதல் காதலின் துள்ளல்…

ஆண் : எத்தனை எத்தனை நளினம்…
அடி என்னுயிர் எங்கும் சலனம்…
இருமுறை இருமுறை ஜனனம்…
அது உன்னை காண்டிட தருனம்…
ரத்தம் மொத்தம் உறைகின்றதே…


Notes : Aval Yaar Aval Song Lyrics in Tamil. This Song from Anbu (2003). Song Lyrics penned by Pa. Vijay. அவள் யார் அவள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading