தவமின்றி கிடைத்த வரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன்வித்யாசாகர்அன்பு

Thavamendri Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…

ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா…
உன் ஒளியால்தானே வாழ்கிறேன்…

பெண் : நீ சூரியன் நான் தாமரை…
நீ வந்தால்தானே மலர்கிறேன்…

ஆண் : நீ சூரியன் நான் வான்முகில்…
நீ நடந்திடும் பாதையாகிறேன்…

பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல்…
என் மடியில் உன்னை ஏந்தினேன்…

ஆண் : தவமின்றி கிடைத்த வரமே… ஹோ ஓ…

பெண் : இனி வாழ்வில் எல்லாம் சுகமே…

—BGM—

ஆண் : ஹோ… கடிவாளம் இல்லாத…
காற்றாக நான் மாற…
வேண்டாமா வேண்டாமா…

பெண் : கடிகாரம் இல்லாத…
ஊர் பார்த்து குடியேற…
வேண்டாமா வேண்டாமா…

ஆண் : கை கோர்க்கும் போதெல்லாம்…
கை ரேகை தேயட்டும்…
முத்தத்தின் எண்ணிக்கை…
முடிவின்றி போகட்டும்…

பெண் : பகலெல்லாம் இரவாகி போனாலென்ன…
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன…

ஆண் : நம் உயிர் ரெண்டும்…
உடல் ஒன்றில்…
வாழ்ந்தால் என்ன…

பெண் : தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…

—BGM—

ஆண் : சூடான இடம் வேண்டும்…
சுகமாகவும் வேண்டும்…
தருவாயா தருவாயா…

—BGM—

பெண் : கண் என்ற போர்வைக்குள்…
கனவென்ற மெத்தைக்குள்…
வருவாயா வருவாயா…

—-BGM—

ஆண் : விழுந்தாழும் உன் கண்ணில்…
கனவாக நான் விழுவேன்…
எழுந்தாலும் உன் நெஞ்சில்…
நினைவாக நான் எழுவேன்…

பெண் : மடிந்தாலும் உன் மூச்சின்…
சூட்டால் மடிவேன்…
பிறந்தாலும் உனையேதான்…
மீண்டும் சேர்வேன்…

ஆண் : இனி உன் மூச்சை…
கடன் வாங்கி நான் வாழுவேன்…

பெண் : தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…

ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா…
உன் ஒளியால்தானே வாழ்கிறேன்…

பெண் : நீ சூரியன் நான் தாமரை…
நீ வந்தால்தானே மலர்கிறேன்…

ஆண் : நீ சூரியன் நான் வான்முகில்…
நீ நடந்திடும் பாதையாகிறேன்…

பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல்…
என் மடியில் உன்னை ஏந்தினேன்…

ஆண் : தவமின்றி கிடைத்த வரமே… ஹோ ஓ…

பெண் : இனி வாழ்வில் எல்லாம் சுகமே…


Notes : Thavamendri Song Lyrics in Tamil. This Song from Anbu (2003). Song Lyrics penned by Thamarai. தவமின்றி கிடைத்த வரமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading