காந்தாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்வைஷ்பவன் சி எச்சோனி மியூசிக் சௌத்

Gandhari Song Lyrics in Tamil


—BGM—

குழு : காந்தாரி காந்தாரி கண்ணழகி காந்தாரி…
உங்க நெஞ்சில் மாயக்காரி வந்து நின்னாளே…

—BGM—

குழு : காந்தாரி காந்தாரி கண்ணழகி காந்தாரி…
உங்க நெஞ்சில் மாயக்காரி வந்து நின்னாளே…

குழு : காந்தாரி காந்தாரி காதுமடல் ரீங்காரி…
வானவில்லின் கொத்து போல வந்து நின்னாளே…

பெண் : பூவினம் எல்லாம் இவ தோழினம்தானோ…
குழு : வழியெல்லாம் வாசன தெழிச்சிவிட்டாளே…

பெண் : வாழ மாப்புல ஏறும் எறும்ப போல்…
குழு : பாத்ததும் சூலமாய் குத்தி வச்சாளே…

குழு : காந்தாரி நிலவோட இடையாக முளச்சாளே…
ஆணோட கனவுக்குள் தினமாடி கலைச்சாளே…

—BGM—

பெண் : காந்தாரி நீ மயக்கு ஆற வித்த படிச்சவ…
பக்கம் போய் நின்னுபாரு பத்துமாடி எங்காடி…

—BGM—

பெண் : தஞ்சாவூரு பொம்மையாட்டம் தலையாட்டி நிக்க மாட்டா…
ஊர பார்த்து ஏறி ஏறி கேள்வி கேட்பாளே…

பெண் : கண்ணகட்டி வரமாட்டா நூறு புள்ள பெறமாட்டா…
எந்த கண்ணன் எந்த நேரம் இவ பார்வையில் சிக்குவானோ…
மண்ணிலுள்ள எல்லோருக்கும் நந்தவனம் தந்தாளே…

குழு : காந்தாரி காந்தாரி கண்ணழகி காந்தாரி…
உங்க நெஞ்சில் மாயக்காரி வந்து நின்னாளே…

குழு : காந்தாரி காந்தாரி காதுமடல் ரீங்காரி…
வானவில்லின் கொத்து போல வந்து நின்னாளே…

—BGM—

பெண் : வந்தான்டா நம்ம ராமன் சிங்காரி இவ ஜானகி…
செங்காந்தள் சீலை கட்டி மங்கையாக சிரிச்சாளே…

பெண் : தீயில் ராமன் இறங்கச் சொன்னான்…
சிங்கமாகி முடிச்சாளே…
பண்டிகையே விடுதலைதான் பந்தமெல்லாம் அழிச்சாளே…

—BGM—

குழு : காந்தாரி காந்தாரி கண்ணழகி காந்தாரி…
உங்க நெஞ்சில் மாயக்காரி வந்து நின்னாளே…

குழு : காந்தாரி காந்தாரி காதுமடல் ரீங்காரி…
வானவில்லின் கொத்து போல வந்து நின்னாளே…

—BGM—


Notes : Gandhari Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2022). Song Lyrics penned by Vivek. காந்தாரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading