எந்த தேசத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்பிரியமான தோழி

Entha Desathil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…

—BGM—

ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…

ஆண் : எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில்…
நீ கலந்தாய்…
இனி நீ இன்றி நான் அழகா…

ஆண் : ஏதோ ஒரு மாற்றம் மாற்றம்…
என்னில் என்னில்…
ஏனோ இடை ஏற்றம் ஏற்றம்…
இதயம் தன்னில்…

ஆண் : நீ கால் முளைத்த புஷ்பம்…
கடல் நுரையில் செய்த சிற்பம்…
உன் முன்பு வந்து நின்றால்…
அந்த சொர்க்கம் கூட அற்பம்…

—BGM—

ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…

—BGM—

ஆண் : வண்ண வண்ண பூவெல்லாம்…
வாசம் வீசி பூ பூக்கும்…
உன்னை போல ஒன்றுக்கும்…
வாசம் வீச தெரியாதே…

ஆண் : கோடி கோடி வார்த்தைகள்…
கோர்த்து கொண்டு வந்தாலும்…
நீ சினுங்கும் ஓசை போல்…
அர்த்தம் எதிலும் கிடையாதே…

ஆண் : ஓ… அழகே நீ வாய் பேச…
கீதம் என்பேனே…
சங்கீதம் என்பேனே…

ஆண் : பேசாத மௌனத்தை…
கவிதை என்பேனே…
புது கவிதை என்பேனே…

ஆண் : கடல் ஓரம் நீயும் வந்தால்…
புயல் வந்ததென்று அர்த்தம்…
நீ என்னை நீங்கி சென்றால்…
உயிர் நின்றதென்று அர்த்தம்…

ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…

—BGM—

ஆண் : உந்தன் கண்கள் ஓரத்தில்…
தீட்டி வைத்த மை தந்தால்…
ஐந்து அல்ல ஐந்நுாறு…
காப்பியங்கள் உண்டாகும்…

ஆண் : உந்தன் கூந்தல் ஈரத்தை…
தொட்டு போன காற்றைதான்…
கொஞ்ச நேரம் சுவாசித்தால்…
எந்தன் வாழ்வில் வரமாகும்…

ஆண் : ஓ… அன்பே உன் இதழைதான்…
சிறைகள் என்பேனே…
பனி சிறைகள் என்பேனே…

ஆண் : மெலிதான இடையைதான்…
பிறைகள் என்பேனே…
தேய் பிறைகள் என்பேனே…

ஆண் : அடி அன்னபறவை ஒன்று…
அன்று வாழ்ந்ததாக கேட்டேன்…
நான் கேட்ட அந்த ஒன்றை…
இன்று கண்களாலே பார்த்தேன்…

ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில்…
நீ பிறந்தாய்…
அட இத்தனை பேரழகா…

ஆண் : எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில்…
நீ கலந்தாய்…
இனி நீ இன்றி நான் அழகா…

ஆண் : ஏதோ ஒரு மாற்றம் மாற்றம்…
என்னில் என்னில்…
ஏனோ இடை ஏற்றம் ஏற்றம்…
இதயம் தன்னில்…

ஆண் : நீ கால் முளைத்த புஷ்பம்…
கடல் நுரையில் செய்த சிற்பம்…
உன் முன்பு வந்து நின்றால்…
அந்த சொர்க்கம் கூட அற்பம்…

—BGM—


Notes : Entha Desathil Song Lyrics in Tamil. This Song from Priyamana Thozhi (2003). Song Lyrics penned by Pa. Vijay. எந்த தேசத்தில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading