காற்றே பூங்காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்பிரியமான தோழி

Katre Poongatre Song Lyrics in Tamil


BGM

பெண் : காற்றே பூங்காற்றே…
ஒரு கவிதை சொல்வாயா…
விண்ணில் செல்லத்தான்…
உன் சிறகுகள் தருவாயா…

பெண் : தென்றலாய் வருகிறேன்…
பூக்களாய் பூக்கவா…
வார்த்தையாய் வருகிறேன்…
பாடலாய் பாடவா…

பெண் : காற்றே பூங்காற்றே…
ஒரு கவிதை சொல்வாயா…
விண்ணில் செல்லத்தான்…
உன் சிறகுகள் தருவாயா…

BGM

பெண் : நதி என்பது ஓர் நாள்…
கடல் என்பதை சேரும்…
எப்போதுமே ஓடும் நதியாகலாம்…

பெண் : ரோஜா செடி போலே…
நீ பூக்கலாம் இங்கே…
காற்றோடு போராடும் குணம் வேண்டுமே…

பெண் : அட உள்ளங்கையால் சூரியனை…
மூடிட முடியாதே…
ஒரு பறவை மோதி கோபுரம்தான்…
சாய்ந்திட கூடாதே…

பெண் : தோழனே தோழனே…
ஓவியன் கை வலி…
சித்திரம் ஆகுது…
ஒவ்வொரு வழியிலும்…
சாதனை உள்ளது…

பெண் : காற்றே பூங்காற்றே…
ஒரு கவிதை சொல்வாயா…
விண்ணில் செல்லத்தான்…
உன் சிறகுகள் தருவாயா…

BGM

பெண் : புயல் வீசுமே என்று…
கரை ஓரமாய் நின்று…
அணை கட்டினால் அது ஓய்வதில்லை…

பெண் : மழை தூறுமே என்று…
நடுவானிலே வந்து…
திரை கட்டினால் மழை முடிவதில்லை…

பெண் : எாி மலையின் மேலே…
தண்ணீர் ஊற்றி…
அணைத்திட முடியாது…

பெண் : ஒரு மின்னல் கீற்றை…
நூலில் கட்டி…
நிறுத்திட இயலாது…
உன்னை யார் வெல்வது…

பெண் : சிப்பியின் பொறுமைதான்…
முத்து போல் மின்னுது…
இலைகளின் சக்திதான்…
கனிகளை தாங்குது…

பெண் : காற்றே பூங்காற்றே…
ஒரு கவிதை சொல்வாயா…
விண்ணில் செல்லத்தான்…
உன் சிறகுகள் தருவாயா…

பெண் : தென்றலாய் வருகிறேன்…
பூக்களாய் பூக்கவா…
வார்த்தையாய் வருகிறேன்…
பாடலாய் பாடவா…


Notes : Katre Poongatre Song Lyrics in Tamil. This Song from Priyamana Thozhi (2003). Song Lyrics penned by Pa. Vijay. காற்றே பூங்காற்றே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading