பெண்ணே நீயும் பெண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்உன்னி மேனன் & கல்பனாஎஸ். ஏ. ராஜ்குமார்பிரியமான தோழி

Penne Neeyum Penna Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

ஆண் : ஒரு மூன்றாம் பிறையை சுற்றி…
தங்க ஜரிகை நெய்த நெற்றி…
பனிபூக்கள் தேர்தல் வைத்தால்…
அடி உனக்கே என்றும் வெற்றி…

ஆண் : பிரம்மன் செய்த சாதனை…
உன்னில் தெரிகிறது…
உன்னை எழுதும் போது தான்…
மொழிகள் இனிக்கிறது…

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

—BGM—

ஆண் : புறா இறகில் செய்த…
புத்தம் புதிய மெத்தை…
உந்தன் மேனி என்று…
உனக்கு தெரியுமா…

பெண் : சீன சுவரை போலே…
எந்தன் காதல் கூட…
இன்னும் நீளமாகும்…
உனக்கு தெரியுமா…

ஆண் : பூங்கா என்ன வாசம் என்று…
உந்தன் மீதுதெரியும்…

பெண் : தந்தம் என்ன வண்ணம் என்று…
உன்னை பார்க்க தெரியும்…
காதல் வந்த பின்னாலே…
கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்…

ஆண் : கம்பன் ஷெல்லி சேர்ந்துதான்…
கவிதை எழுதியது…
எந்தன் முன்பு வந்துதான்…
பெண்ணாய் நிற்கிறது…

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

—BGM—

பெண் : மழை வந்த பின்னால்…
வானவில்லும் தோன்றும்…
உன்னை பார்த்த பின்னால்…
மழை தோன்றுதே…

ஆண் : பூக்கள் தேடிதானே…
பட்டாம் பூச்சி பறக்கும்…
உன்னை தேடி கொண்டு…
பூக்கள் பறந்ததே

பெண் : மின்னும் விந்தை என்ன என்று…
மின்னல் உன்னை கேட்கும்…
எங்கே தீண்ட வேண்டும் என்று…
தென்றல் உன்னை கேட்கும்…

ஆண் : உன்னை பார்த்த பூவெல்லாம்…
கையெழுத்து கேட்டு நிற்கும்…

பெண் : நீ தான் காதல் நூலகம்…
சேர்ந்தேன் புத்தகமாய்…
நீதான் காதல் பூ மழை…
நனைவேன் பாத்திரமாய்…

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

பெண் : அரை நொடிதான் என்னை பார்த்தாய்…
ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய்…
பனி துளியாய் நீயும் வந்தாய்…
பாற் கடலாய் நெஞ்சில் நின்றாய்…

ஆண் : பிரம்மன் செய்த சாதனை…
உன்னில் தெரிகிறது…
உன்னை எழுதும் போதுதான்…
மொழிகள் இனிக்கிறது…

—BGM—


Notes : Penne Neeyum Penna Song Lyrics in Tamil. This Song from Priyamana Thozhi (2003). Song Lyrics penned by Pa. Vijay. பெண்ணே நீயும் பெண்ணா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading