எங்கெங்கே எங்கெங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஆஷா போஸ்லே & ஹரிஹரன்தேவாநேருக்கு நேர்

Engengaey Song Lyrics in Tamil


—BGM—

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ…
இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே…

பெண் : நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று…
தொடாதே நீ தொடாதே…

ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்…
செல்லாதே தள்ளிச் செல்லாதே…

ஆண் : ஓ என்னம்மா என்னம்மா…
உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா…

—BGM—

ஆண் : என் தூக்கத்தில் என் உதடுகள்…
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்…

பெண் : என் கால்களில் பொன் கொலுசுகள்…
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்…

ஆண் : பூப்போல இருந்த மனம் இன்று…
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே…
சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே…

—BGM—

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…

—BGM—

பெண் : என் வீதியில் உன் காலடி…
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்…

ஆண் : உன் ஆடையின் பொன் நுாலிலே…
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்…

பெண் : நான் உன்னை துரத்தியடிப்பதும்…
நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா…
முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா…

—BGM—

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ…
இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே…

பெண் : நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று…
தொடாதே நீ தொடாதே…

ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்…
செல்லாதே தள்ளிச் செல்லாதே…

ஆண் : ஓ என்னம்மா என்னம்மா…
உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா…

—BGM—


Notes : Engengaey Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. எங்கெங்கே எங்கெங்கே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading