மனம் விரும்புதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணிதேவாநேருக்கு நேர்

Manam Virumbuthey Song Lyrics in Tamil


குழு : ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்…
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்…
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்…
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்…

BGM

குழு : தத் தித் தக திதி…
தத் தித் தக திகு…
தத் தித் தக திதி…
தத் தித் தக திகு…
தத் தித் தக திதி…
தத் தித் தக திகு…

பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை…
மனம் விரும்புதே…
உறங்காமலே கண்ணும் கண்ணும்…
சண்டை போடுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நினைத்தாலே சுகம்தானடா…
நெஞ்சில் உன் முகம்தானடா…
அய்யய்யோ மறந்தேனடா…
உன் பேரே தெரியாதடா…

பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை…
மனம் விரும்புதே…

BGM

பெண் : அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்…
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்…
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது…

குழு : வெட்டியது…

பெண் : அதிலே என் மனம் தெளியும் முன்னே…
அன்பே உந்தன் அழகு முகத்தை…
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது…

குழு : ஒட்டியது…

பெண் : புயல் வந்து போனதொரு வனமாய்…
ஆனதடா என்னுள்ளம்…
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்…
என் நிலைமை அது சொல்லும்…

பெண் : மனம் ஏங்குதே… ஏ…
மனம் ஏங்குதே…
மீண்டும் காண…
மனம் ஏங்குதே…

பெண் : நினைத்தாலே சுகம்தானடா…
நெஞ்சில் உன் முகம்தானடா…
அய்யய்யோ மறந்தேனடா…
உன் பேரே தெரியாதடா…

பெண் : அஹ… மனம் விரும்புதே…
மனம் விரும்புதே உன்னை… உன்னை…

BGM

பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை…
மனம் விரும்புதே…

BGM

பெண் : மழையோடு நான் கரைந்ததுமில்லை…
வெயிலோடு நான் உருகியதில்லை…
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா…

குழு : இருந்ததடா…

பெண் : மலைநாட்டுக் கரும்பாறை மேலே…
தலை காட்டும் சிறு பூவைப்போலே…
பொல்லாத இளங்காதல் பூத்ததடா…

குழு : பூத்ததடா…

பெண் : சட்டென்று சலனம் வருமென்று…
ஜாதகத்தில் சொல்லலையே…
நெஞ்சோடு காதல் வருமென்று…
நேற்றுவரை நம்பலையே…

பெண் : என் காதலா… ஆஆ…
என் காதலா…
நீ வா… நீ வா… என் காதலா…

பெண் : நினைத்தாலே சுகம்தானடா…
நெஞ்சில் உன் முகம்தானடா…

BGM

பெண் : அய்யய்யோ மறந்தேனடா…
உன் பேரே தெரியாதடா… ஆஆ…

பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை…

BGM


Notes : Manam Virumbuthey Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. மனம் விரும்புதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading