தீண்டி தீண்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி.உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்யுவன் சங்கர் ராஜாபாலா

Theendi Theendi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே…
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே…
நீயே காதல் நூலகம்…
கவிதை நூல்கள் ஆயிரம்…
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே…

பெண் : என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே…
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே…
நீயே காதல் நூலகம்…
கவிதை நூல்கள் ஆயிரம்…
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே…

BGM

பெண் : தொடங்கினால் கூசும் இடங்களால்…
நகங்களே கீறும் படங்களா…

ஆண் : தேகம் என்பதென்ன…
ஓர் ஆடை கோபுரம்…
ஆடை நழுவும்போது…
ஓர் காமன் போர் வரும்…

பெண் : குறும்புகள் குறையாது…
தழும்புகள் தெரியாது…

ஆண் : கைகள் மேயுது… மேயுது…
ரேகைகள் தேயுது…

பெண் : என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே…
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே…

ஆண் : நீயே காதல் நூலகம்…
கவிதை நூல்கள் ஆயிரம்…

பெண் : காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே…

ஆண் : தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே…
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே…

BGM

ஆண் : இருவரே பார்க்கும் படவிழிலா…
திரையிடும் மோக திருவிழா…

பெண் : காதின் ஓரம் சாய்ந்து…
நீ கூந்தல் கோதிடு…
போதும் என்ற போதும்…
நீ கேட்டு வாதிடு…

ஆண் : வேர்வரை சாய்க்காமல்…
முதல் புயல் முடியாது…

பெண் : காதல் தீவர தீவர…
வேர்வையில் முழுகுது…

ஆண் : தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே…
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே…
நீயே காதல் நூலகம்…
கவிதை நூல்கள் ஆயிரம்…
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே…

பெண் : தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே…
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே…


Notes : Theendi Theendi Song Lyrics in Tamil. This Song from Bala (2002). Song Lyrics penned by Pa Vijay. தீண்டி தீண்டி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top