எந்தன் நெஞ்சில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Endhan Nenjil Paahima Song Lyrics in Tamil


பெண் : எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

BGM

{ பெண் : எந்தன் நெஞ்சில்…
குழு : பாஹிமாம்…
பெண் : உன் எண்ணம்…
குழு : பாஹிமாம்…
பெண் : நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே… } * 2

ஆண் : ஓ உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…
காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய்…
உண்மை நீ உரைத்தாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

பெண் : உன்னை என்னில்…
ஆண் : விதைத்தாய்…
பெண் : உயிரை ஊற்றி…
ஆண் : வளர்த்தாய்…
பெண் : ஒரே புள்ளியில் நம் உள்ளம் பூ பூத்ததே…
ஆண் : காதல் தேன் வார்த்ததே…

BGM

பெண் : மேடை போட்டு சொல்வதல்ல…
பெண்ணின் காதல் என்பது…
ஜாடை சொல்லும் விழியின் அசைவில்…
சர்வ மொழியும் உள்ளது…

ஆண் : ஓ… இரு விழி அசைவிலே…
இதயம் தளன்று போனது…
இன்னொரு பார்வையில்…
இதயம் என்ன ஆவது…

பெண் : அட நெஞ்சில் எழுந்த காதல் எண்ணம்…
வெளிய சொல்ல முடியுமா…
தரையில் விழுந்து நிழல்கள் என்ன…
சத்தம் போட்டு கதறுமா…

ஆண் : ஓ நிலா படகில் நீயும் நானும்…
உலா போவோம் வாடி வா…

பெண் : உன்னை என்னில்…
ஆ… உன்னை என்னில் விதைத்தாய்…
உயிரை ஊற்றி வளர்த்தாய்…

ஆண் : உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…
காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய்…
உண்மை நீ உரைத்தாய்…

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

பெண் : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

பெண் : எந்தன் நெஞ்சில்…
குழு : பாஹிமாம்…
பெண் : உன் எண்ணம்…
குழு : பாஹிமாம்…
பெண் : நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

BGM

ஆண் : ஹோ ஹோ… இரண்டு சிறகு இருந்த போதும்…
பறக்கும் வானம் ஒன்றுதான்…
இரண்டு இதயம் மோதும் போதும்…
இருக்கும் காதல் ஒன்றுதான்…

பெண் : ஒவ்வொரு மொழியிலும்…
வேறு வேறு வார்த்தைதான்…
வார்த்தைகள் மாறலாம்…
பூக்கள் என்றும் பூக்கள்தான்…

ஆண் : ஓ காலம் மாறும் நிலங்கள் மாறும்…
காதல் என்றும் காதல்தான்…
கண்கள் இழந்தால் காதல் தெரியும்…
கண்டு கொண்டதும் இன்றுதான்…

பெண் : முத்தம் போட்டால் மொத்தம் அழியும்…
வெட்கம் என்னும் கோடுதான்…

ஆண் : உந்தன் மூச்சில் என் சுவாசம்…
கலந்து உலாவும் நேரம்தான்…

BGM

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

குழு : எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

BGM


Notes : Endhan Nenjil Paahima Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. எந்தன் நெஞ்சில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading