சொல்லாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Sollayo Solaikili Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…

—BGM—

பெண் : பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே…
பச்சைக் கிளி ஒளிதல் போல…
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்…

ஆண் : பச்சைக் கிளி மூக்கைப் போல…
வெட்கம் உன்னை காட்டிக் கொடுக்க…
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்…

பெண் : பூ இல்லாமல் சோலை இல்லை…
பொய்யில்லாமல் காதல் இல்லை…
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்…

ஆண் : பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு…
மெய்யின் கையில் ஒற்றைச்சாவி…
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்… ஹோஹோ ஹோஓ…

பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…

ஆண் : ஹோய்… சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

—BGM—

பெண் : சேராத காதலர்கெல்லாம்…
சேர்த்து நாம் காதல் செய்வோம்…
காதல் கொண்டு வானை அளப்போம்…

ஆண் : புதிய கம்பன் தேடிப்பிடித்து…
லவ்வாயனம் எழுதிடச்செய்வோம்…
நிலவில் கூடி கவிதை படிப்போம்…

பெண் : கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்…
நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம்…
சண்டை போட்டு இன்பம் வளர்போம்…

ஆண் : பூவும் பூவும் மோதிக் கொண்டால்…
தேனைத்தானே சிந்திச்சிதறும்…
கையில் அள்ளி காதல் குடிப்போம்…

—BGM—


Notes : Sollayo Solaikili Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. சொல்லாயோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading