எந்தப்பக்கம் காணும் போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசின்மயி & ராகுல் நம்பியார்யுவன் ஷங்கர் ராஜாதர்மதுரை

Endha Pakkam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : எந்தப்பக்கம் காணும் போதும்…
வானம் ஒன்று…
நீ எந்தப்பாதை ஏகும்போதும்…
ஊர்கள் உண்டு…

பெண் : ஒரு காதல் தோல்வி காணும் போதும்…
காதல் உண்டு…
சிறு கரப்பான் பூச்சி…
தலை போனாலும் வாழ்வதுண்டு…

பெண் : அட ரோஜாப்பூக்கள் அழுதால்…
அது தேனை சிந்தும்…
என் ராஜாபையன் நீ அழுதால்…
அதில் யானம் மிஞ்சும்…

பெண் : உன் சோகம் ஒரு மேகம்…
நான் சொன்னால் அது போகும்…
உன் கண்ணீர் ஏந்தும்…
கண்ணம் நான் ஆகும்…

பெண் : எந்தப்பக்கம் காணும் போதும்…
வானம் ஒன்று…
நீ எந்தப்பாதை ஏகும்போதும்…
ஊர்கள் உண்டு…

—BGM—

பெண் : எப்போதுமே இன்பம் என்றால்…
முன்னேற்றமே ஏது…
எப்போதுமே பகலாய் போனால்…
வெப்பம் தாங்காதே…

பெண் : மனசை சலவை செய்ய…
ஒரு கண்ணீர் நதிதான் உண்டு…
உன் உயிரை சலவை செய்ய…
ஒரு காதல் நதி உண்டு…

பெண் : உன் சுவாசப்பையை மாற்று…
அதில் சுத்தக்காற்றை ஏற்று…
நீ இன்னோர் உயிரில்…
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு…

—BGM—

ஆண் : சந்தர்ப்பமே தீமை செய்தால்…
சந்தோஷமே ஏது…
சல்லடையில் தண்ணீர் அள்ளி…
தாகம் தீராது…

ஆண் : தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால்…
மழையாய் வந்தாய்…
நம் உறவின் பெயரே தெரியாதம்மா…
உயிரைத் தருகின்றாய்…

ஆண் : உன் உச்சந்தலையைத் தீண்ட…
ஓர் உரிமை உண்டா பெண்ணே…
உன் உள்ளங்காலில் தலையை…
சாய்த்தால் போதும் கண்ணே…

—BGM—

ஆண் : எந்தப்பக்கம் காணும்போதும்…
வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும்…
ஊர்கள் உண்டு…

ஆண் : நீ தாவித்தாவித் தாவும் போதும்…
தாய்மை உண்டு…
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும்…
நேர்மை உண்டு…

ஆண் : உன் வார்த்தைக்கு முன்னால்…
என் வாழ்வே உன் பின்னால்…
உன் மடியில்…
எந்தன் கண்ணீா் வழியுமடி…

ஆண் : உன் சோகம் ஒரு மேகம்…
நான் சொன்னால் அது போகும்…
உன் கண்ணீர் ஏந்தும்…
கண்ணம் நான் ஆகும்…

—BGM—


Notes : Endha Pakkam Song Lyrics in Tamil. This Song from Dharmadurai (2016). Song Lyrics penned by Vairamuthu. எந்தப்பக்கம் காணும் போதும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading