நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்இளையராஜாதியாகம்

Nallavarkellam Satchigal Rendu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…

ஆண் : நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்…
தெய்வத்தின் காட்சியம்மா…
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா…
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…

ஆண் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
தெய்வத்தின் சாட்சியம்மா…

—BGM—

ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்…
நதி செய்த குற்றம் இல்லை…
விதி செய்த குற்றம் அன்றி…
வேறு யாரம்மா…

ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்…
நதி செய்த குற்றம் இல்லை…
விதி செய்த குற்றம் அன்றி…
வேறு யாரம்மா…

ஆண் : பறவைகளே பதில் சொல்லுங்கள்…
மனிதர்கள் மயங்கும் போது…
நீங்கள் பேசுங்கள்…
மனதிற்கு மனதை கொஞ்சம்…
தூது செல்லுங்கள்…

ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
தெய்வத்தின் சாட்சியம்மா…

—BGM—

ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்…
ஒரு துளி வஞ்சம் இல்லை…
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை…

ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்…
ஒரு துளி வஞ்சம் இல்லை…
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை…

ஆண் : மனிதனம்மா மயங்குகிறேன்…
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே…
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே…

ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…

ஆண் : நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்…
தெய்வத்தின் காட்சியம்மா…
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா…
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…

—BGM—


Notes : Nallavarkellam Satchigal Rendu Song Lyrics in Tamil. This Song from Thyagam (1978). Song Lyrics penned by Kannadasan. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading