எனக்கு மட்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. சூரியவேலன்ஸ்டீபன் சகரியா & பவிதேரா ரேணுகா மைக்கேல் & லோச்சர்னா புரவலன்ஸ்டீபன் சகரியாநாம்

Enakku Mattum Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கு மட்டும் பிழையா காதல்…
எனக்கு மட்டும் பிழையாச்சோ…
எனக்கு மட்டும் பிழையா காதல்…
எனக்கு மட்டும் பிழையாச்சோ…

BGM

ஆண் : என்னை நீ கட்டி கொண்டால் என்ன…
பெண் : இறுக்கமா…
ஆண் : என் இதழ் தொட்டு கொண்டால் என்ன…
பெண் : தயக்கமா…
ஆண் : என் காதல் தருவேனே…
பெண் : ஓ… என் ஆயுள் நீயடா…

பெண் : என்னை நீ கட்டி கொண்டால் என்ன…
ஆண் : இறுக்கமா…
பெண் : என் இதழ் தொட்டு கொண்டால் என்ன…
ஆண் : தயக்கமா…
பெண் : என் காதல் தருவேனே…
ஆண் : ஓ… என் ஜீவன் நீயடி…

ஆண் : ஓ உன் கூந்தல் கூந்தல் அழகினிலே…
தொலைந்தே நான் வாழ்கிறேனே…

பெண் : உன் பார்வை பேசும் மொழியினிலே…
விழுந்தாலும் எழுகிறேனே…

ஆண் : உயிரே நாம் இருவரும் சேரவே…
இரு இதயமும் ஏங்குதோ…
உன்னை கொடு அன்பே அன்பே…

பெண் : உயிரே என் காதல் யாவுமே…
உன்னை சேர்ந்தால் வாழுமோ…
உன்னை மனம் கொண்டாடுதே…

BGM

ஆண் : ஓ… தாலாட்டும் கண்ணே…
உன் தவறில்லை பெண்ணே…
உன் பார்வை என்னை இங்கு சுடுகிறதே…

பெண் : நீ காதல் தந்தால்…
அதில் பிழை இல்லை என்றால்…
என் ஜென்மம் உனக்காக காத்திருப்பேனே…

பெண் : உன் மறுபாதி நானாக கூடாதா…
உயிர் உன்னோடு சேராமல் போகாதா…

ஆண் : உன் நிழலாக நான் வாழ கூடாதா…
என் உயிர் போனாலும் உன் இதயம் மறவாதே…

பெண் : உயிரே நாம் இருவரும் சேரவே…
இரு இதயமும் ஏங்குதோ…
உன்னை கொடு அன்பே அன்பே…

ஆண் & பெண் : உயிரே என் காதல் யாவுமே…
உன்னை சேர்ந்தால் வாழுமோ…
உன்னை மனம் கொண்டாடுதே…


Notes : Enakku Mattum Song Lyrics in Tamil. This Song from Naam (2021). Song Lyrics penned by T Suriavelan. எனக்கு மட்டும் பாடல் வரிகள்.


Scroll to Top