| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| Unknown | கே.ஜே. யேசுதாஸ் | Unknown | பெருமாள் பாடல்கள் |
En Nenjil Palli Kondavan Song Lyrics in Tamil
ஆண் : ஓம் நாராயணாய நமஹ…
ஓம் நாராயணாய நமஹ…
ஓம் நாராயணாய நமஹ…
—BGM—
ஆண் : என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
ஸ்ரீ ரங்கநாயகன்…
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
ஸ்ரீ ரங்கநாயகன்…
ஆண் : சயனத்தில் ஆதிசேஷன் மேலே…
திருவடி திருமகள் மடி மேலே…
பூலோக நாயகன் ஸ்ரீரங்கன்…
ஆண் : என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
—BGM—
ஆண் : சயனிக்கும் பெருமாளின் தொப்புள் கொடி…
கமலத் தொப்புள் கொடி மேல் ப்ரம்ஹன் அமர்ந்த படி…
சயனிக்கும் பெருமாளின் தொப்புள் கொடி…
கமலத் தொப்புள் கொடி மேல் ப்ரம்ஹன் அமர்ந்த படி…
ஆண் : உலகத்தின் உயிர்களைப் படைத்த படி…
அப்படைப்பினைத் திருமால் காத்தபடி…
ஆண் : அண்டம் பகிரண்டம் அதைக் காக்கும்…
அவன் கோதண்டம்…
விண்ணையும் மண்ணுலகையும் அளக்கும்…
அவ்வாமனனின் பாதம்…
ஆண் : ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி…
ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி…
நான் வணங்கிடும் இறைவனோ சங்கு சக்ரதாரி…
ஆண் : என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
ஸ்ரீ ரங்கநாயகன்…
ஆண் : சயனத்தில் ஆதிசேஷன் மேலே…
திருவடி திருமகள் மடி மேலே…
பூலோக நாயகன் ஸ்ரீரங்கன்…
ஆண் : என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
—BGM—
ஆண் : திருப்பதியில் எழுந்தருளும் திருமாலும் நீயே…
உன் திருமார்பினில் அமர்ந்திருப்பது பத்மாவதி தாயே…
திருப்பதியில் எழுந்தருளும் திருமாலும் நீயே…
உன் திருமார்பினில் அமர்ந்திருப்பது பத்மாவதி தாயே…
ஆண் : உடுப்பியினில் தவழ்கின்ற ஸ்ரீ க்ருஷ்ணன் நீயே…
உன் அருள் வேண்டி நிற்கின்றேன் நான் உந்தன் சேயே…
ஆண் : நெறியையும் அற வழியையும் எமக்குணர்த்த…
பல அவதாரம்…
எடுத்தாய் எடுத்துரைத்தாய் அதுவே…
வாழ்வின் ஆதாரம்…
ஆண் : அருள் தரும் தேவா வரம் தர வா வா…
அருள் தரும் தேவா வரம் தர வா வா…
மூவுலகையும் ஆள்கின்ற த்ரிவிக்ரம ரூபா…
ஆண் : என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
ஸ்ரீ ரங்கநாயகன்…
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
ஸ்ரீ ரங்கநாயகன்…
ஆண் : சயனத்தில் ஆதிசேஷன் மேலே…
திருவடி திருமகள் மடி மேலே…
பூலோக நாயகன் ஸ்ரீரங்கன்…
ஆண் : என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
Notes : En Nenjil Palli Kondavan Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. என் நெஞ்சில் பள்ளி பாடல் வரிகள்.

