என் அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாதனா சர்கம் & பென்னி டயல்ஹாரிஸ் ஜெயராஜ்சத்யம்

En Anbe Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…
நான் உன்னில் உன்னில் என்பதால்…
என் தேடல் நீங்கிப் போனதே…

பெண் : என்னில் நீயே என்பதால்…
என் காதல் மேலும் கூடுதே…
காண வேண்டும் யாதும் நீயாகவே…
மாற வேண்டும் நானும் தாயாகவே…

குழு : ஆத்தடி ஆசை அலை பாய…
சேத்துக்கோ மீச கொடை சாய…
கூத்தடி கோடை மழை பெய்ய…
ஏத்துக்கோ ஆடை உலை காய…

குழு : ஆத்தடி ஆசை அலை பாய…
சேத்துக்கோ மீச கொடை சாய…
கூத்தடி கோடை மழை பெய்ய…
ஏத்துக்கோ ஆடை உலை காய…

பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…
நான் உன்னில் உன்னில் என்பதால்…
என் தேடல் நீங்கிப் போனதே…

பெண் : என்னில் நீயே என்பதால்…
என் காதல் மேலும் கூடுதே…
காண வேண்டும் யாதும் நீயாகவே…
மாற வேண்டும் நானும் தாயாகவே…

—BGM—

பெண் : தலை தொடும் மழையே…
செவி தொடும் இசையே…
இதழ் தொடும் சுவையே…
இனிப்பாயே…

பெண் : விழி தொடும் திசையே…
விரல் தொடும் கணையே…
உடல் தொடும் உடையே…
இணைவாயே…

பெண் : யாவும் நீயாய் மாறிப் போக…
நானும் நான் இல்லையே…
மேலும் மேலும் கூடும் காதல்…
நீங்கினால் தொல்லையே…
தெளிவாகச் சொன்னால்…
தொலைந்தேனே உன்னால்…

குழு : ஆத்தாடி அசந்தே போனாயா…
ஆசையில் மெலிந்தே போனாயா…
நாக்கடி நலிந்தே போனாயா…
காதலில் கரைந்தே போனாயா…

குழு : ஆத்தாடி அசந்தே போனாயா…
ஆசையில் மெலிந்தே போனாயா…
நாக்கடி நலிந்தே போனாயா…
காதலில் கரைந்தே போனாயா…

பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…

—BGM—

பெண் : கருநிறச் சிலையே…
அறுவது கலையே…
பரவச நிலையே…
பகல் நீயே…

பெண் : இளகிய பனியே…
எழுதிய கவியே…
சுவை மிக கனியே…
சுகம் நீயே…

பெண் : கூடு பாவை வேகத்தோடு…
காதல் தினம் ஓடுதே…
கூடு பாயும் தாகத்தோடு…
ஆசை நதி மோதுதே…
தொடுவாயா என்னை…
தொடர்வேனே உன்னை…

குழு : ஆத்தாடி அசந்தே போனாயா…
ஆசையில் மெலிந்தே போனாயா…
நாக்கடி நலிந்தே போனாயா…
காதலில் கரைந்தே போனாயா…

குழு : ஆத்தாடி அசந்தே போனாயா…
ஆசையில் மெலிந்தே போனாயா…
நாக்கடி நலிந்தே போனாயா…
காதலில் கரைந்தே போனாயா…

பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…
நான் உன்னில் உன்னில் என்பதால்…
என் தேடல் நீங்கிப் போனதே…

பெண் : என்னில் நீயே என்பதால்…
என் காதல் மேலும் கூடுதே…
காண வேண்டும் யாதும் நீயாகவே…
மாற வேண்டும் நானும் தாயாகவே…

பெண் : காண வேண்டும் யாதும் நீயாகவே…
மாற வேண்டும் நானும் தாயாகவே…

—BGM—


Notes : En Anbe Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Yugabharathi. என் அன்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading