எஜமான் காலடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஎஜமான்

Ejamaan Kaladi Song Lyrics in Tamil


—BGM—

குழு : எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வைப்போம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…

ஆண் : எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வெச்சோம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…

ஆண் : உங்களத்தான் நம்புதிந்த பூமி…
இனி எங்களுக்கு நல்ல வழி காமி…
உங்களத்தான் நம்புதிந்த பூமி…
இனி எங்களுக்கு நல்ல வழி காமி…

குழு : எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வைப்போம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…

—BGM—

ஆண் : ஊருஜனம்தான் வாழ நல்ல காலம் வந்தாச்சு…
நேத்துவர நான்பார்த்த துன்பம் யாவும் போயாச்சு…
வீடு வர ஆத்துத் தண்ணி வந்து தாகம் தீர்ந்தாச்சு…
வீதியெல்லாம் பள்ளிக்கூட பெல்லு ஓச கேட்டாச்சு…

ஆண் : இல்லாமை இங்கு கிடையாது…
குழு : எங்க எஜமான் இருக்கையிலே…

ஆண் : பொல்லாப்பு நம்ம நெருங்காது…
குழு : எஜமான் உங்க காவலிலே…

குழு : உங்களத்தான் நம்புதிந்த பூமி…
இனி எங்களுக்கு நல்ல வழி காமி…

குழு : எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வைப்போம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…

—BGM—

ஆண் : தோட்டம் காடு மேடெல்லாம் சொந்தம் தேடும் தொழிலாளி…
ஏழை கூட்டம் முன்னேற நீங்கதானே கூட்டாளி…
ஊருக்கொரு கஷ்டம் வந்தா பங்குபோடும் பாட்டாளி…
உள்ளபடி நீதி சொல்ல தேவை இல்ல நாற்காலி…

ஆண் : தன்னால வணங்குது ஊரு…
குழு : எங்க எஜமான் நடக்கையிலே…

ஆண் : எந்நாளும் குறை கிடையாது…
குழு : எஜமான் இங்க இருக்கையிலே…

குழு : உங்களத்தான் நம்புதிந்த பூமி…
இனி எங்களுக்கு நல்ல வழி காமி…

ஆண் : எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வெச்சோம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…

ஆண் : உங்களத்தான் நம்புதிந்த பூமி…
இனி எங்களுக்கு நல்ல வழி காமி…
உங்களத்தான் நம்புதிந்த பூமி…
இனி எங்களுக்கு நல்ல வழி காமி…

குழு : எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வைப்போம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…


Notes : Ejamaan Kaladi Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by Vaali. எஜமான் காலடி பாடல் வரிகள்.


Scroll to Top