தெய்வத்தின் தெய்வம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
எஸ். மூக்கையாL.R. ஈஸ்வரிவீரமணி & சோமுஅம்மன் பாடல்கள்

Deivathin Deivam Song Lyrics in Tamil


BGM

பெண் : தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி…
தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி…

பெண் : வேண்டியதை கொடுத்திடுவாய் வேதவல்லி மாரி…
கோமதியே சங்கரியே குணவதியே மகமாயி…

பெண் : தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
வேற்காட்டு மாரி…
வேற்காட்டு மாரியம்மா…

BGM

பெண் : கருமை நிறம் கொண்டவளே…
காத்தாயி கருமாரி…
கண்ணாயிரம் கொண்டவளே…
கண்கண்ட கருமாரி…

பெண் : கருமை நிறம் கொண்டவளே…
காத்தாயி கருமாரி…
கண்ணாயிரம் கொண்டவளே…
கண்கண்ட கருமாரி…

பெண் : ஓயாமல் நின் நாமம்…
உரைக்கின்ற உன் மக்கள்…
ஓயாமல் நின் நாமம்…
உரைக்கின்ற உன் மக்கள்…
மாறாத நின் புகழை…
பாடிடுவேன் அருள் மாரி…

பெண் : தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
வேற்காட்டு மாரியம்மா…
வேற்காட்டு மாரி…

BGM

பெண் : கல்லாக இருந்தாலும்…
கருணை உள்ளம் கொண்டவள் நீ…
காணவரும் பக்தருக்கு…
காட்சி தரும் தேவி நீ…

பெண் : கல்லாக இருந்தாலும்…
கருணை உள்ளம் கொண்டவள் நீ…
காணவரும் பக்தருக்கு…
காட்சி தரும் தேவி நீ…

பெண் : காலன் கூட உன்னைக்கண்டு…
காதவழி சென்றிடுவான்…
காலன் கூட உன்னைக்கண்டு…
காதவழி சென்றிடுவான்…
காத்தாயி கருமாரி…
மகமாயி மாகாளி…

பெண் : தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி…
தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி…


Notes : Deivathin Deivam Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by S. Mookiah. தெய்வத்தின் தெய்வம் பாடல் வரிகள்.


Scroll to Top