சின்னஞ் சிறு பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & எஸ். ஜானகிதேவாஆத்தா உன் கோயிலிலே

Chinnanchiru Poove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே…

—BGM—

ஆண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…

ஆண் : மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே…
குளிர் மேகம் கண்ணுக்குள்ளே…
சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே…

ஆண் : எந்தன் மன வீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது…

ஆண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… ஏஏ…

—BGM—

ஆண் : மல்லிகை பூக்களை…
மெல்லிய உந்தன் புன்னகை சிந்துதடி…
மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்…
கண்ணே உன் கைகளடி…

ஆண் : மல்லிகை பூக்களை…
மெல்லிய உந்தன் புன்னகை சிந்துதடி….
மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்…
கண்ணே உன் கைகளடி…

ஆண் : வெட்கப்படும் கன்னத்த நான்…
தொட்டுக்கட்டா தொட்டுக்கட்டா…
பக்கத்துல வந்து உன்ன…
கட்டிக்கட்டா கட்டிக்கட்டா…

ஆண் : இந்த மாணிக்க தேரெந்தன் காணிக்கைதானென்று…
நெஞ்சோடு ஓட்டிக்கட்டா…

பெண் : எந்தன் மனவீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது…

பெண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… ஏஏ…

—BGM—

பெண் : காத்து வரும் ஜன்னலில்…
ஒரு காதல் வந்தது…
அது காத்துக் கிடந்த ரெண்டு நெஞ்சை…
சேர்த்து வைத்தது…

பெண் : நம்பி வச்ச பூச்செடியில்…
நட்சத்திரம் பூத்திருச்சு…
செம்பருத்தி காடுயெல்லாம்…
சேலைகளாய் காய்ச்சிருச்சு…

பெண் : ஒரு கஸ்தூரி மானிங்கு கல்யாண ஆசையில்…
கண்ணால பேசிடுச்சு…

ஆண் : எந்தன் மனவீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது…

ஆண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே…

பெண் : குளிர் மேகம் கண்ணுக்குள்ளே…
சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே…
எந்தன் மன வீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது…

பெண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… ஏஏ…


Notes : Chinnanchiru Poove Song Lyrics in Tamil. This Song from Aatha Un Koyilile (1991). Song Lyrics penned by Kalidasan. சின்னஞ் சிறு பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading