சின்ன சின்னதாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புதுவை நம்பிஹரிஹரன் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாமௌனம் பேசியதே

Chinna Chinnathai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சின்ன சின்னதாய் பெண்ணே…
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்…
என்விழியில் வாள் கொண்டு வீசி…
இளம் மனதில் காயங்கள் தந்தாய்…

ஆண் : துன்பம் மட்டும் உன் உறவா…
உனை காதல் செய்ததே தவறா…
உயிரே… உயிரே…

ஆண் : காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

ஆண் : பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

—BGM—

ஆண் : காதல் வெறும் மேகம் என்றேன்…
அடை மழையாய் வந்தாய்…
மழையோடு நனைந்திட வந்தேன்…
நீ தீயை மூட்டினாய்…
மொழியாக இருந்தேனே…
உன்னால் இசையாக மலர்ந்தேனே…

ஆண் : என் உயிரோடு கலந்தவள் நீதான் ஹே பெண்ணே…
கனவாகி கலைந்ததும் எனோ சொல் கண்ணே…

ஆண் : மௌனம் பேசியதே உனக்கது தெரியலயா…
காதல் வார்த்தைகளை கண்கள் அறியலயா…

—BGM—

ஆண் : காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

ஆண் : பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

—BGM—

ஆண் : துணை இன்றி தனியாய் சென்றேன்…
என் நிழலாய் வந்தாய்…
விடை தேடும் மாணவன் ஆனேன்…
என் விடையும் நீயென…
வந்தாயே என் வழியில்…
காதல் தந்தாயே உன் மொழியில்…

ஆண் : என் நெஞ்சில் காதல் வந்து நான் சொன்னேன்…
உன் காதல் வேறோர் மனதில் எனை நொந்தேன்…

ஆண் : கண்கள் உள்ளவரை காதல் அழிவதில்லை…
பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை…

—BGM—

ஆண் : காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

ஆண் : பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

—BGM—


Notes : Chinna Chinnathai Song Lyrics in Tamil. This Song from Mounam Pesiyadhe (2002). Song Lyrics penned by Puthuvai Nambi. சின்ன சின்னதாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading