சின்னச் சின்ன மழைத்துளிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎம்.ஜி.ஸ்ரீகுமார்ஏ.ஆர்.ரகுமான்என் சுவாசக் காற்றே

Chinna Chinna Mazhai Thuligal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண் கண்…
ஒரு துளி விழுது…
ஒரு துளி விழுது…
கண் கண் கண் கண்…
ஒரு துளி விழுது…
ஒரு துளி விழுது…

ஆண் : ஒரு துளி இரு துளி…
சில துளி பல துளி…
படபட தடதட சடசடவென சிதறுது…

—BGM—

ஆண் : சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ…
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ…
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ…
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ…

ஆண் : சக்கரவாகமோ மழையை அருந்துமாம்…
நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ…
மழையின் தாரைகள் வைர விழுதுகள்…
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ…

ஆண் : சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ…
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ…

—BGM—

ஆண் : சிறு பூவினிலே விழுந்தால்…
ஒரு தேன் துளியாய் வருவாய்…
சிறு சிப்பியிலே விழுந்தால்…
ஒரு முத்து எனவே முதிர்வாய்…

ஆண் : பயிர் வேரினிலே விழுந்தால்…
நவதானியமாய் விளைவாய்…
என் கண்விழிக்குள் விழுந்ததனால்…
கவிதையாக மலர்ந்தாய்…

ஆண் : அந்த இயற்கை அன்னை படைத்த…
ஒரு பெரிய ஷவர் இது…
அட இந்த வயது கழிந்தால்…
பிறகெங்கு நனைவது…

ஆண் : இவள் கன்னியென்பதை…
இந்த மழை கண்டறிந்து சொல்லியது…

ஆண் : சக்கரவாகமோ மழையை அருந்துமாம்…
நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ…
மழையின் தாரைகள் வைர விழுதுகள்…
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ…

—BGM—

ஆண் : மழை கவிதை கொண்டு வருது…
யாரும் கதவடைக்க வேண்டாம்…
ஒரு கருப்புக்கொடி காட்டி…
யாரும் குடை பிடிக்க வேண்டாம்…

ஆண் : இது தேவதையின் பரிசு…
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்…
நெடுஞ்சாலையிலே நனைய…
ஒருவர் சம்மதமும் வேண்டாம்…

ஆண் : அந்த மேகம் சுரந்த பாலில்…
ஏன் நனைய மறுக்கிறாய்…
நீ வாழவந்த வாழ்வில்…
ஒரு பகுதி இழக்கிறாய்…

ஆண் : நீ கண்கள் மூடிக் கரையும்போது…
மண்ணில் சொர்க்கம் எய்துவாய்…
நீ கண்கள் மூடிக் கரையும்போது…
மண்ணில் சொர்க்கம் எய்துவாய்…

—BGM—

ஆண் : சக்கரவாகமோ மழையை அருந்துமாம்…
நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ…
மழையின் தாரைகள் வைர விழுதுகள்…
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ…

ஆண் : சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ…
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ…
சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ…
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ…

—BGM—


Notes : Chinna Chinna Mazhai Thuligal Song Lyrics in Tamil. This Song from En Swasa Kaatre (1999). Song Lyrics penned by Vairamuthu. சின்னச் சின்ன மழைத்துளிகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading