Category Archives: மாவீரன் கிட்டு

மாவீரன் கிட்டு – Maaveeran Kittu (2016)

Inaivom Song Lyrics in Tamil

இணைவோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார்டி. இமான்மாவீரன் கிட்டு

Inaivom Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரெல்லாம் ஒன்றே உறவாவோம் இன்றே…
காக்கை குருவி எங்கள் ஜாதி…
என்றே சொன்னான் பாரதி…
வாழும் உலகை அன்பால் வெல்ல…
செய்வோம் செய்வோம் ஓர் விதி…

ஆண் : நேயம் இருந்தால் போதுமடா…
காயம் உடனே ஆறுமடா ஆறுமடா…

ஆண் : இணைவோம் இணைவோம்…
இதயம் பூக்க இணைவோம்…
இணைவோம் இணைவோம்…
இடறை நீக்க இணைவோம்…

ஆண் : இணைவோம் இணைவோம்…
மனிதம் காக்க இணைவோம்…
இணைவோம்… ஹாஆஆ… ஹாஆஆஅ…

BGM

ஆண் : உயிரெல்லாம் ஒன்றே உறவாவோம் இன்றே…
மேலே என்ன கீழே என்ன ஏனோ இந்த பாடுகள்…
ஆசை அன்பு காதல் கொண்டால் தீரும் எல்லைக் கோடுகள்…

ஆண் : வாசம் மலரின் மேடையடா…
நேசம் உலகின் ஆடையடா ஆடையடா…

ஆண் : இணைவோம் இணைவோம்…
இதயம் பூக்க இணைவோம்…
இணைவோம் இணைவோம்…
இடறை நீக்க இணைவோம்…

ஆண் : இணைவோம் இணைவோம்…
மனிதம் காக்க இணைவோம் இணைவோம்…

BGM

ஆண் : ஏழை கோழை என்றே பார்த்து…
வானம் பொழிவது இல்லையடா…
நீயா நானா சண்டை போட…
பூமி சுழல்வது இல்லையடா…

ஆண் : மரம் என்றால் காற்று…
மணல் என்றால் ஊற்று…
இயற்கையில் ஏது பிரிவினை…
இணைவது தானே உறுதுணை…

ஆண் : எதுவும் இங்கே கைவசம் ஆக…
அறிவோம் அறிவோம் மனிதமே…
முடியும் என்றால் உதவிகள் செய்து…
கலைவோம் கலைவோம் துயரமே துயரமே…

ஆண் : இணைவோம் இணைவோம்…
இதயம் பூக்க இணைவோம்…
இணைவோம் இணைவோம்…
இடறை நீக்க இணைவோம்…

ஆண் : இணைவோம் இணைவோம்…
மனிதம் காக்க இணைவோம் இணைவோம்…

ஆண் : உயிரெல்லாம் ஒன்றே உறவாவோம் இன்றே…
நெஞ்சில் நேசம் கொள்வோம் என்றால்…
கல்லும் தெய்வம் ஆகுமே…
உண்மை அன்பை நாமும் காட்ட…
கண்ணீர் மட்டும் போதுமே…

ஆண் : யாவும் ஒரு நாள் மாறிடுமே…
காலம் வழியை காட்டிடுமே காட்டிடுமே…


Notes : Inaivom Song Lyrics in Tamil. This Song from Maaveeran Kittu (2016). Song Lyrics penned by Yugabharathi. இணைவோம் பாடல் வரிகள்.


எளந்தாரி சொல்லு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபூஜா வைத்யநாத்டி. இமான்மாவீரன் கிட்டு

Elanthaari Song Lyrics in Tamil


BGM

பெண் : எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்…
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்…

பெண் : வெரசா தொடவா…
முழுசா கெடவா…
நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத…

பெண் : எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்…
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்…

BGM

பெண் : ஒன்ன எனக்கு ரொம்பப் புடிக்கும்…
சொல்லுறத கேளு…
கண்ணு முழிச்சா ஒன்ன நெனச்சு…
சுத்துது என் காலு…

பெண் : கொத்துக் கறி போல நீயும் ஏன்…
என்ன கொட சாய்க்குற…
வெக்கயில தூரல் மாதிரி…
நெக்குருகப் பாக்குற…

பெண் : கருவாட்டப் பாத்தா வட்டம் போடும் காக்கா…
அது போல நானே ஒன்ன சேரும் வாழ்க்க…
மனசால என நீயும் மஞ்சக் குளிக்க வையி…

பெண் : எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…

BGM

பெண் : நெஞ்ச பொளந்து உள்ள இருக்கும்…
ஒன்ன நிதம் பாப்பேன்…
உச்சந்தலையில் அம்மி அரைக்கும்…
முத்தம் இடக் கேப்பேன்…

பெண் : மெத்தையில தூங்கிடாம நீ…
வித்தைகள காட்டிடு…
கையில் உள்ள ரேகை தேயணும்…
கட்டிக் கொள்ள பாத்திடு…

பெண் : உனக்காகத்தானே உப்பு புளி காரம்…
ஒதுக்காம வாங்கி திங்குது என் தேகம்…
தலவாழ எல போட்டு தண்ணி தெளிச்சு வையி…

பெண் : எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…

பெண் : வெரசா தொடவா…
முழுசா கெடவா…
நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத…

பெண் : எளந்தாரி… ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்…
தருவேனே… ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
எளந்தாரி…


Notes : Elanthaari Song Lyrics in Tamil. This Song from Maaveeran Kittu (2016). Song Lyrics penned by Yugabharathi. எளந்தாரி சொல்லு பாடல் வரிகள்.


கண்ணடிக்கல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ் & பூஜா வைத்யநாத்டி. இமான்மாவீரன் கிட்டு

Kannadikkala Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல தாலாட்ட…

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…
எம் பாட்ட நித்தம் நீ கேட்ட…

ஆண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
பச்சை பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்…
பாராட்ட வண்ணப்பூ மூட்ட…

ஆண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
பச்சப் பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்…
பாராட்ட வண்ணப்பூ மூட்ட…
என் கூட்ட விட்டுப் போமாட்ட…

பெண் : உன்னையே தினம் தினம்…
இவள் மனம் சுத்துதே தூசியா…
என்னவோ சுகம் சுகம்…
அதில் விழ எண்ணுதே ஈஸியா…

ஆண் : அருவாள தூக்கும் ஆசை ஆசையா…

BGM

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…

BGM

ஆண் : சிலம்புகள் பறை இசை கேட்க…
பரம் பொருள் தெருவையும் பார்க்க…
சிலம்புகள் பறை இசை கேட்க…
பரம் பொருள் தெருவையும் பார்க்க…

பெண் : வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே…
உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே…
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே…
உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே…

ஆண் : அல்லல் படும் வாழ்வும்…
அழகாகும் இனி மேலே…
கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது…
உனைப் போலே…

பெண் : உப்பளத்தில் விழுந்து நீ…
முத்தெடுத்து போனாயே உயிரே…

BGM

பெண் : கண்ணடிக்கல…
ஆண் : கை புடிக்கல…
பெண் : உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
ஆண் : தாலாட்ட…
பெண் : மெல்ல வாலாட்ட…
ஆண் : ம்ம்ம்ம்…

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…

ஆண் : வாலாட்ட… எம் பாட்ட நித்தம் நீ கேட்ட…

BGM

பெண் : உன்னையே தினம் தினம்…
இவள் மனம் சுத்துதே தூசியா…
என்னவோ சுகம் சுகம்…
அதில் விழ எண்ணுதே ஈஸியா…

ஆண் : அருவாள தூக்கும் ஆசை ஆசையா…


Notes : Kannadikkala Song Lyrics in Tamil. This Song from Maaveeran Kittu (2016). Song Lyrics penned by Yugabharathi. கண்ணடிக்கல பாடல் வரிகள்.